பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


ஒரு தவணை, ராமலிங்கம் தொழில் விஷயமாகக் கோயம்புத்தூர் ஜில்லாவுக்குப் பயணமானார். புறப்பட்டுப் போன ஆறாவது நாள், பங்களா வாசலில் தந்திச் சேவகன் மணியடித்து நின்றான், அகிலாண்டத்திற்குக் கால்கள் பூமியில் பாவவில்லை. தெய்வம் ஈந்த தெம்புடன், சேதியைப் பிரித்தாள். இங்கே மகளும் மாப்பிள்ளையும் சுகம். நான் நாளை இரவு புறப்பட உத்தேசம்' என்று கண்டிருந்தது.

மகனுக்கு முகம் கழுவினாள் அவள். புது வென்னீரில் ஹார்லிக்ஸ் கலந்து கோப்பையில் இட்டு நீட்டினாள். பையன் தந்தையின் கட்டிலையே கசிந்த கண்களால் நோக் கிய வண்ணம், ஹார்லிக்ஸ் கலவையைக் குடித்தான். “நான் பெரியவனானதும் ரொம்பப் புத்திசாலியாயிருப் பேன்னு' அப்பா அடிக்கடி சொல்லுவாங்க இல்லையா அம்மா?... நான் பெரியவன் ஆகிறதைப் பார்க்குமட்டும் அப்பா நல்லபடியா இருப்பாங்க... ஏம்மா, இருப்பாங் களில்லியா?" என்றான் அவன்.

தாலியைக் கண்களில் ஒற்றிக் கொண்ட அகிலாண்டம், "நிச்சயம் நல்லபடியா இருப்பாங்கடா, கண்ணு !" என்றாள், நம்பிக்கையில் பிறக்கக் கூடிய சொற்களுக்குத் தான் எத்துணை அழுத்தம்!

குமாருக்கு ஏக மகிழ்வு. கழுத்துச் சங்கிலியைச் சட்டைக்கு வெளியே அழகாகப் போட்டான். அப்பாவின் படுக்கைக்குச் சென்றான். கன்னத்தைத் தடவினான். 'அப்பா!' என்றான். ராமலிங்கம் பையப் பைய விழிகளைத் திறக்க எத்தனம் செய்தார். தவமிருந்து பெற்ற குலக்கொழுந்தின் நெற்றியைத் தடவ கையை உயர்த்தினார். அது நழுவி விழுந்தது. அவரது கண்கள் கலங்கின. குமார் தந்தையின் கண்ணீரைத் துடைத்தான். “நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க அப்பா! அடுத்த மாசம் நீங்க சொன்ன