பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

மாதிரி உங்களுக்கு அறுபதுக்கு அறுபது விசேஷம் தடபுடலா நடக்கும் அப்பா!... டாக்டர் தைரியம் சொல்லியிருக்காராக்கும். ஆமா, அப்பா!... வேணும்னா, அம்மாவுக்கு உதவியா நம்ம அக்காவை வரவழைச்சிக்கிடலாமா?” —கேள்வியை பவ்யமாகக் கேட்டான் குமார்.

ராமலிங்கம் தம் மனையாட்டியை நோக்கி விரலை அசைத்தார். பிறகு, விரலசைவில் எழுதுவது போன்ற ஒரு பாவனையைக் காண்பித்தார். அவளுக்குப் புரிந்து விட்டது. மகள் கமலாட்சி எல்லோரது நலம் கோரி எழுதியிருந்த தபாலுக்குப் பதில் அனுப்பிய விவரத்தை அவர் அறிய ஆவல் காட்டினார். அகிலாண்டம் நெருங்கி உட்கார்ந்தாள். “உங்களுக்கு உடம்புக்கு முடியாமல் இருக்கிறதைப்பத்தி கமலாட்சிக்கு எழுதலை. பாவம், அது பொறுக்காது. நாளைக்கு எழுதுறேன். ஒருதரம் இங்கே வந்திட்டுப் போகச் சொல்லலாம்னு இருக்கேனுங்க!” என்று தெரிவித்தாள்.

கைகளை உயர்த்தி ‘சரி’ சொன்னார் ராமலிங்கம். உதயத்தின் மலர்ச்சியில் தெறித்த கதிர்கள் அவரது முகத்தில் அணைந்தன.

உள்ளே சென்று மீண்டாள் அகிலாண்டம். மஞ்சளும் திலகமும் பூத்துணுக்கும் பொலிவூட்டின.

டாக்டர் வந்தார்!

பொங்கி வந்த இருமலை முன்றானையால் கட்டுப்படுத்தியவாறு, அகிலாண்டம் கடிதத்தை மீண்டும் படித்தாள்.

“செல்வமகள் சௌபாக்கியவதி கமலாட்சிக்கு ஆசீர்வாதம்.

உன் தகப்பனார் அவர்களுக்குப் போன வாரம் தொட்டு உடம்புக்குச் சுகமில்லை. இப்போதுதான்