92
அந்தி மகளின் செம்பஞ்சுக் குழம்பிட்ட பாதங்கள் லயசுத்தத்துடன், தாள அமைப்புத் தவறாத பாங்கில் மண்புழுதியில் பதிந்து நடை பயின்றன.
இரணிய வேளை.
பெற்றவளின் அன்புப்பிடி மகளது வைராக்கியத்தைத் தளர்த்தியது. வட்டிச் சோற்றில் கால்வாசி காலியானது. “நாங்க வந்த வேளை, நல்லபடியா குணமாகிக்கிட்டு வந்த அப்பாவையும் மறுபடி படுக்கையிலே விழச் செஞ் சிருக்குது" என்று கேவினாள்.
“அதெல்லாம் ஒண்னுமில்லேம்மா? நீ கொஞ்ச நேரம் படுத்து எழுந்திரு. சவலைப் பிள்ளைக்காரி!...”
திடுதிப்பென்று, பயங்கரக் கூச்சல், கேட்டது.
அகிலாண்டமும் கமலாட்சியும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள்.
கார்த்திகேயன் கையையும் காலையும் உதறிக்கொண்டு கத்தினார்; கதறினார்!
தொலைபேசியும் காரும் சுறுசுறுப்பும் பெற்றன.
கமலாட்சி கண்ணோடு கண் பொருத்தவில்லை. உட்குழிந்திருந்த கண்கள் செஞ்சாந்தின் நிறம் காட்டின. அவிழ்ந்து விழுந்திருந்தக் கூந்தல் கற்றைகள் காற்றில் கழிந்தன. கதம்பச் சரத்தில் மிஞ்சியிருந்தது ஒரே ஒரு கனகாம்பரம் மட்டுமே. நெற்றிப்பொட்டு பளிச்சென்றிருந்தது. அழுத குழந்தையைத் தட்டிக்கொடுத்துத் தூங்கப் பண்ணினாள். கணவரையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள், மார்பகம் எம்பி எம்பித் தணிந்தது. புருஷனின் மேனி போர்வையைச் செம்மை செய்யக் குனிந்தாள். போர்வையினுள் பதுங்கிக்