பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8
கோடிச் செம்பொன்

“சாவித்திரி, போயிட்டு மத்தியானத்துக்குள்ளே விட்டுக்கு வந்திடறேன்; வீட்டுக்காரர் வாடகைக்கு வந்தால், எப்படியும் இன்னிக்குள்ளே கொடுத்திடுறதாச் சொல்லு!" என்று கூறிவிட்டு வெளிக் கிளம்பினான் ராம சாமி.

கணவன் சென்று மறைந்த வழியையே விழி நோக்கப் பார்த்துக் கொண்டிருந்த சாவித்திரி நீண்ட பெருமூச்சை நிலைப்படியில் தங்க வைத்தபின் உள்ளே நுழைந்தாள். உலகாளும் மாதாவின் அருட்புன்னகையைச் சுடர் தெறித்துக் காட்டிய குத்துவிளக்கின் தெய்வ ஒளி பிரதிபலித்துக் கொண்டிருந்தது. 'தாயே! இன்றைக்காகிலும் ஏதாவது வழியைக் காட்டு’ என்று அவளது இதயம் பிரார்த்தித்தது. சேலைத் தலைப்பால் கண் இமைகளைத் துடைத்த வண்ணம் கூடத்திலிருந்து சமயலறைக்குள் பிரவேசித்தாள் அவள்.

அடுத்த பகுதியில் குடியிருந்தவர் வீட்டுக் கடிகாரம் ஒன்பது முறை ஓசை எழுப்பி அடங்கியது.

சமையல் உள்ளில் தகர டப்பாவைத் கவித போது, இரண்டு அல்லது மூன்று ஆழாக்குகள் காணும்படியாகப் பச்சரிசி தரையில் சிந்தியது. காய்கறிக் கூடையில் நாலு தக்காளிப் பழங்கள் இருந்தன; வதங்கிப் போன கத்திரிக்