பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 இ குன்றக்குடி அடிகளார்

"இன்று நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கையின் - மனிதன் உள்ளிட்ட - உயிரினங்களின் முழுத் தொகுதியானது, ஆதியில் ஒருயிரணுவாக இருந்த ஒரு சில மூலக் கருக்களி லிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற, ஒரு நீண்ட நிகழ்வுப் போக்கின் விளைவுதான்் - இவையுங்கட இரசாயன வழியில் தோன்றிய ஊன்மம் (Protoplasam) அல்லது புரதம் (albumen) GT6TLIG63(5ßg/ தோன்றியவை" என்பது டார்வின் கொள்கை.

"புரதப் பொருள்களுடைய இருத்தலின் பாங்கே உயிர்; அதன் சாராம்சமான ஆக்கக்கூறின் உள்ளடக்கம் அவற்றின் புறத்தே உள்ள இயற்கைச் சூழலுடன் தொடர்ந்தாற் போன்ற வளர்சிதை மாற்ற ரீதியான பரிமாற்றம் கொள்வதேயாம்" என்று மார்க்சியம் கூறுகிறது. எனவே சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் உயிர்கள் கடவுளால் படைக்கப் பெற்றவை யல்ல என்ற அந்த அளவில், ஒத்த கருத்துடையன.

உயிர்கள் படைக்கப்பட்டன என்றால் உயிர்களின் குறைகளுக்கும் நிறைகளுக்கும் கடவுளே பொறுப்பாளி யாகின்றான் என்ற கருத்து உருவாகும். அப்படியானால் இந்த உலகில் இன்று சுயநலக்காரர்களால் ஏற்பட்டுள்ள சாதி வேற்றுமைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கடவுளின் ஏற்பாடுகள் என்றாகிவிடும். கடவுள் குறைவிலா நிறைவு; கோதிலா அமுது; உயர்வற உயர்ந்த உயர்வு. இயற்கை நியதியின் பாற்பட்ட பரிணாம வளர்ச்சியில் குறை, நிறையாக மாறி வளரும். ஆனால் நிறையிலிருந்து குறை 9. ஏங்கல்ஸ், லுத்விக்-பாயர்பாகும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்-பக்கம் 69 10. ஏங்கல்ஸ், இயற்கையின் இயக்க இயல்-பக்கம் 49