பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 19

நிறைய ஆய்வு செய்ய வேண்டியிருந்தது சைவ சித்தாந்த ஆசிரியன்மார்களுக்கு அத்தகைய நெருக்கடி இல்லை.

ஊழ் என்பது என்ன?

சித்தாந்தச் சமய வினைகளில் வழியது உயிர்களின் வாழ்க்கை - ஆக்கம் என்று கூறுகிறது. இது தொடர்பாக நம்முடைய ஆய்விற்குரிய சொற்கள் மூன்று அவை, முறையே வினை, விதி, ஊழ் என்று அமையும். "வினை” என்பது உயிர்கள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அகநிலை அறிகருவிகளாலும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற புறநிலைச் செயற்கருவிகளாலும் செய்யப் பெறும் செயல் களைக் குறிக்கும். அகநிலையிலும் புறநிலையிலும் உயிர், செயற்பாடின்றியிருத்தல் இயலாத ஒன்று. ஒரோவழி புறநிலையில் "சும்மா இருத்தல்" இயலுமாயினும் அக நிலையில் "சும்மா இருத்தல்” இயலாது.

செம்மான் மகனைத் திருடும்.திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் சும்மா இரு சொல் லற என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந் திலனே'

என்பது அறிக.

இங்ங்னம் இயற்றப்பெறும் செயல்களுக்குரிய பயன்களைச் செய்தோரின் துய்ப்பிற்கு வந்தடைவதற்குரிய நியதியை (Natural Law) "விதி" என்பர். செய்த வினைகளின் பயன்கள், விதிவழியில் செய்தோரின் அனுபவத்திற்கு வந்து சேரும்போது "ஊழ்” என்று பெயர் பெறுகிறது. செய்யும் வினைகளின் பயன்களுள் இம்மையிலேயே துய்ப்பனவும் உண்டு; மறுமையில் தொடர்வனவும் உண்டு. உயிர்ச்

24. கந்தரனுபூதி - 13