பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தி குன்றக்குடி அடிகளர்

வலிமையுடையதன்று. ஆதலால் வினை, விதி, ஊழ் என்கிற சொற்கள் உணர்த்தும் தத்துவத்தின் வழி ஒருவனது உழைப்பின் உபரியை மற்றவன் எடுத்துக்கொள்வதைச் சைவ சித்தாந்தம் ஏற்கவும் இல்லை. அங்கீகரிக்கவும் இல்லை. மாறாக, வினையின் பயன், செய்தவனையே சார வேண்டும் என்று ஐயத்திற்கிடமின்றிக் கூறுகிறது. அதாவது வினையின் விளைவு நன்மையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் அவரவர்களையே சாரும். இதனை, தருமை யாதீனக் குருமுதல்வர் குருஞானசம்பந்தர்.

"அவரவர் வினைவழி அவரவர் வந்தனர் அவரவர் வினைவழி அவரவர் அனுபவம் எவரெவர்க் குதவினர் எவரெவர்க் குதவிலர் தவரவர் நினைவது தமை உணர் வதுவே"

என்று அருளியுள்ளமையால் அறிக.

மேலும், இப்பிறப்பிலேயே சார்ந்து துய்க்கக் கூடிய வினைகளும் உண்டு. அடுத்த பிறப்புகளுக்குத் தொடர் வனவும் உண்டு. சராசரி அறிவோடு நோக்கினால் கட் புலனுக்கு எளிதாகத் தெரியக்கூடிய பயன்கள் இப்பிறப்பி லேயே துய்க்கக் கூடியனவாக அமையக் கூடும். இப்பொழுது, இந்தத் தலைமுறையில் நம் கண் முன்னே தெரிகிற வெளிச்ச மான ஓர் உண்மை உழைப்பாளிகள் உழைக்கிறார்கன்! உலகம் முழுவதும் துகர்வதற்குரிய பொருள்களைப் படைத்து அளிக்கிறார்கள்! ஆனால், உழுது உலகத்திற்கு உணவளிப் பவன் போதிய உணவில்லாமலும், உலகு உடுத்துமகிழ உடைகொடுப்பவன் போதிய உடையில்லாமலும், மகிழ்ந்து கூடியிருக்க இல்லம் அமைத்துக் கொடுத்தவன் வசதியான

28. சிவபோகசாரம் - தனிப்பாடல்