பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் தி 127

கணக்கான நீர்த்திவலைகளின் செறியில் கடல் கிடக்கும் பொழுது, நீர்ப்பரப்பு மிகுதியாக இருக்கிறது; ஆர்ப்பரிக்கிறது! ஆழ் கடலின் வயிறு, முத்தை ஈன்று தருகிறது! தண்மையான காற்றால் உயிர்க்குலத்தைத் தழைக்க வைக்கிறது! கடல்படு செல்வம் அள்ள அள்ளக் குறையாதது! அந்த ஒப்பற்ற மாபெரும் கடலிலிருந்து ஒரு திவலை நீர் கரையில் விழுமானால் அத்திவலை என்னாகிறது! கரையில் விழுந்த சில நொடிகளிலேயே காய்ந்து போகிறது. அதுபோல, நாம் மானிட சாதியின் ஓர் உறுப்பாக இருக்கிறபோது நமது வாழ்க்கையில் பெருமை ஏற்படுகிறது! பாவேந்தர் பாரதிதாசனும்,

"என் குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள் அறிவை விரிவு செய்! அகண்ட மாக்கு! விசாலப் பார்வையால் விழுந்த மக்களை அணைந்து கொள்! உனைச் சங்கமழறக்கு: மானிட சமுத்திரம் நானென்று கவு’3

என்று பாடினான். பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் தத்துவங்கள்

இந்தச் சங்கம் வாழ்விற்கு நுழை வாயிலாக அமைவது குடும்பம். பெண் வாழ்க்கைத்துணை, வாழ்க்கைத் துணை நலம்! பெண்களைப் பெருமைப்படுத்துவதே சித்தாந்தத்தின் நோக்கம். சிவபரம்பொருளின் அருளே, சக்தி என்பது.

"அருளது சக்தியாகும்"

33. பாரதிதாசன் கவிதைகள். முதல் தொகுதி - பா. 54 34. சிவஞானசித்தியார் சுபாக்கம் - 239