உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ஜ் குன்றக்குடி அடிகளார்

தாழ்வுகளை அங்கீகரிப்பதில்லை. இத்துறையில் இவ்விரு தத்துவ இயல்களும் ஒத்தே நிற்கின்றன.

உண்மை நீதியை உணர்த்தும் தத்துவங்கள்

மனித நாகரிகத்தின் மையம் நீதியேயாம். இன்று நம்முடைய சமுதாயத்தில் நீதி என்ற சொல் கொச்சைப் படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் சமூக நீதி பற்றி நமக்குக் கவலையே இல்லை. கடவுளின் மறு பெயரே "நீதி" என்கிறார், மாணிக்கவாசகர்.

"நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்

நிறைமலர்க் குருந்தம் மேவிய சீர் ஆதியே'

என்பது திருவாசகம்.

கச்சியப்பர் சைவ நீதி என்று போற்றுவார்.

"மேன்மை கொள் சைவநீதி விளங்குக

உலகமெல்லாம்"|

நீதி என்பது என்ன? சட்டங்கள். சாத்திரங்களின் படி வழங்கப்படுவது நீதியா? அவையிரண்டுமே கூடத் தற் சார்பு காரணமாக நெறிமுறை பிறழ்ந்தவர்களால் இயற்றப்படும் பொழுது, அங்கே எப்படி உண்மையான நீதியைக் காண முடியும்? எனவே,

"உங்களுடைய பூர்ஷாவா) சட்ட நீதித் தொகுப்பு என்பது உங்களுடைய விருப்பக்கருத்தைத் தவிர வேறில்லை. அவற்றை எல்லோருக்குமான சட்டங் களாக நீங்கள் ஆக்கி வைத்துள்ளீர்கள் உங்களுடைய அந்த விருப்பம் என்பது அவற்றின் சாராம்சமான இயல்பும் திசைவழியும் உங்கள் வர்க்கத்தின் நிலைப்

40. திருவாசகம் அருட்பத்து - 1 41. கந்தபுராணம் - பாடல் 5