பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் தி 133

மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் சமுதாயம் காண வேண்டும் என்பதுதான்் மார்க்சியம்.

"உற்பத்தியாளர்கள் சுயேச்சையாகவும் சமத்துவ முறையிலும் பங்கெடுத்துக் கொள்ளும் அடிப்படை யில் உற்பத்தியை ஒருங்கமைக்கும் சமுதாயமானது அரசு இயந்திரம் முழுமையையும் அது அப்பொழுது எங்கு போய்ச் சேர வேண்டுமோ அங்கு - அதாவது தொல்பொருள்களின் கண்காட்சியில், நூற்பு, இராட்டை, வெண்கலக் கோடரி ஆகியவற்றின் அருகில் கிடத்தி வைக்கும்" .

என்பது காண்க.

இந்தக் கருத்திலும் சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் ஒரு திசையிலேயே நம்மை வழி நடத்திச் செல்கின்றன; மாறுபாடு இல்லை. இந்நிலை வரவேற்கத் தக்கது.

பொருள் முதல் வாதமும் சார்ந்ததன் வண்ணமும்:

அடுத்து மிக முக்கியமான ஆய்வு மார்க்சின் பொருள் முதல் வாதம். அதாவது ஒரு மனிதனின் சிந்தனை, கருத்து, அறிவு, உணர்வு, ஒழுக்கம் ஆகியன அவனுடைய பொறிகளின் வாயிலாக - புலன்களின் வாயிலாகத் தொடர்பு கொள்ளும் பொருள்களிலிருந்து வந்து அமை கின்றன என்பது பொருள் முதல் வாதத் தத்துவத்தின் அடிப்படைக் கொள்கை. - .

"ஒரு * புறநிலைப் பொருள் தனி மனிதனுடைய முளையில் புலனுணர்வுகள், புலனறிவுகள், அறிவிப்பு, தெரிவிப்புகள், கருத்துருவங்களின் வடிவத்தில்

44. கார்ல்மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 2 பக்கம் 322