பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தி குன்றக்குடி அடிகளார்

உள்ளத்தின் அளவில் மறுபதிப்பு செயப்படுவது என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். உணர்வு நிலையின் உள்ளடக்கம் இறுதியில் சுற்றுப்புறமுள்ள உண்மை நிலையால் நிர்ணயிக்கப்படுகிறது"

சைவசித்தாந்தமும் ஆன்மா அல்லது உயிர், சார்ந்ததன் வண்ணமாகிறது என்று கூறுகிறது. உயிர், உலகத்தைச் சார்ந்திருந்தால் உலகியல் தன்மையும் திருவருளைச் சார்ந் திருந்தால் அத்தன்மையும் பெற்று விளங்குகிறது என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. சேக்கிழார், திருப்புகலூரில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், முருகநாயனார் இம்மூவரும் ஒருங்கிணைந்த காட்சியை எடுத்துக் கூறும் போது,

"உடனுறைவின் பயன் பெற்றார்"6

என்று கூறுகிறார். இஃது ஒர் அருமையான சமூக விஞ்ஞானச் சொற்றொடராகும். ஒருவர், மற்றொருவரோடு சேர்ந்து வாழ்ந்தால், அங்ங்ணம் சேர்ந்து வாழ்ந்ததன் பயனை அடைந்தால்தான்் சேர்ந்து வாழ்ந்ததற்குப் பொருள் உண்டு. அதாவது ஒவ்வொருவருடைய தன்மையும் - அறிவு, ஆற்றல், பண்பாடு, பயன்கொள்ளுதல் ஆகியன அனைத்தும் பன்மடங்கு பெருகி வளர்ந்தால்தான்் உடனுறைந்தனர் என்பதற்குப் பொருள் உண்டு. ஆதலால், உயிர் எதைச் சார்ந்திருக்கிறதோ அதன் வண்ணமாகவே அமைகிறது என்பதைப் பொருள் முதல் வாதத் தத்துவத்தோடு ஒத்துப் பார்த்தால் பெரிய முரண்பாடு இல்லை என்றே தோன்றுகிறது. - 45. மார்க்சிய - லெனினிய தத்துவ ஞானத்தின் அடிப்படைகள் பக்கம் 153

46. பெரியபுராணம். திருநாவுக்கரசர் - 244