பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : குன்றக்குடி அடிகளார்

"மைப்படிந்த கண்ணாளும் தான்ும் கச்சி

மயானத்தான்் வார்சடையான் என்னி னல்லான் ஒப்புடைய னல்லன் ஒருவனல்லன்

ஒருர னல்லன் ஒருவமன் இல்லி அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்

அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன்

என்றெழுதிக் காட்டொணாதே"

என்று அப்பரடிகள் கூறுமாறு போலவும், இறைவன் இன்ன இடத்தன், இன்ன ஊரினன் என்று எடுத்தியம்ப இயலாது. அவ்வாறு எங்கணும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனுக்குத் திருக்கோயில் ஏன்? திருக்கோயில் கடவுள் எழுந்தருளியுள்ள இடம்! ஆனால், கடவுளுக்காகத் திருக்கோயில்கள் அல்ல! பொதுவாக, உயிர்க்குல ஈட்டம், சிறப்பாக மானிடகுல சட்டம் இறைவனைக்கான, அதனுடன் கலந்து உறவாட, இறை நலன்களைப் பெறத் துணையாய் அமைவது திருக் கோயில். அடுத்து, வாழப் பிறந்த மனித இனம் ஒன்றுபடவும், ஒப்புரவு நலன்கள் பெற்றச் சிறந்து வாழ்ந்திடவும் திருக்கோயில் துணையாய் அமைவது. திருக்கோயிலை மையமாகக் கொண்டு இறைமைத் தத்துவம் மேலாண்மை செய்தது! இறைமைத் தத்துவத்தின் வழி நின்று மக்கள் சமுதாயத்தை ஒருங்கிணைக்க - சமுதாய மேம்பாட்டிற் குரிய நெறிமுறைகளைக் காண - சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு உருவம் கொடுக்கத் திருக்கோயில்களை மையமாகக் கொண்டு இயங்கின்ர் செயல்பட்டனர். ஏன்? அப்பாலுக்கு அப்பாலாக விளங்கிய கடவுளையே சமுதாய உறுப்பாகக் கொண்டு வந்து செயல்படுத்தினர் ஏவல் கொண்டனர் இஃதொரு அருமையான தத்துவம்: