பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தி குன்றக்குடி அடிகளர்

செய்யத்தக்கன அறிந்து செய்தல் வேண்டும். மானுடத்தின் சென்றகால வரலாற்றுக்குரியவர்களாக வாழ்ந்தவர்கள் முழுமையாக வாழ்ந்துவிட வில்லை என்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன; இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அதனால், மானுட வாழ்க்கையென்பது வளமான வாழ்க் கையை நோக்கி, நிறை நலத்தை நோக்கிப் பயணம் செய்து கொண்டேயிருக்கிறது. இன்னும் முடிவடைந்து விடவில்லை. இதுதான்் வளமான வாழ்க்கை- நிறைநலம் சான்ற வாழ்க்கை என்று அறுதியிட்டுக் கூறக்கூடிய நிலை இன்னமும் உருவாகவில்லை. வாழ்க்கையின் சோதனைகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன. வளமான வாழ்க்கையைக் காண, திருவள்ளுவர், அப்பரடிகள், காரல் மார்க்ஸ், லியோ டால்ஸ்டாய், அண்ணல் காந்தியடிகள் முதலிய சான்றோர் பலர் முயன்று வந்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நடத்திய சோதனைகள் முற்றாக வெற்றி பெறவில்லை. அவர்கள் வாழ்க்கையைப் பற்றிய சில உண்மைகளை நமக்குக் கூறியிருக்கிறார்கள். அவற்றை முதலாகக் கொண்டு நாம் வளமான வாழ்க் கையை நோக்கித் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும். நல்ல காலமாக மானுட வாழ்க்கை, தொடங்கிய காலந் தொட்டு ஒரு தொடர் கொடியோட்டம் போல நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட எல்லையை ஒருவரே சென்றடையாமல் பலர் கூடி முயற்சி செய்து அடைகின்ற விளையாட்டுக்குக் கொடியோட்டம் என்று பெயர். அதுபோல, வரலாற்றுப் போக்கில் வாழ்ந்த முதல் மனிதன் தொடங்கி வைத்த மானுட வாழ்க்கையின் ஒட்டம் முறையாக வளர்ந்து கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையின்