பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் & 11

"அப்பன் நீ அம்மைநீ ஐயனும் நீ

அன்புடைய மாமனும் மாமியும் ஒப்புடைய மாதரும் ஒண் பொருளும் நீ

ஒருகுலமும் சுற்றமும் ஒருரும் நீ துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ

துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ இப்பொன்நீ இம்மணி நீ இம்முத்தும் நீ

இறைவன் நீ ஏறுார்ந்த செல்வன் நீயே

என்ற பாடல் இறைவனை உற்ற அன்புடைய உறவாகவும் சுற்றமாகவும் கொண்டு போற்றும் பண்பு நோக்கத்தக்கது.

ஆதலால், தமிழர் நோக்கில் குறிப்பாகச் சைவ ఢ}_j పjjT(U சமய நோக்கில், திருக்கோயில்கள் கடவுள் எழுந்தருளியிருக்கும் இடங்கள் மட்டும்ல்ல, சமுதாய மையங்கள்! சமுதாயத்தின் இயக்கம்! இதனாலேயே திருக் கோயில்களிடத்து மக்கள் அளவற்ற நம்பிக்கை வைத்தனர். அளவற்ற கொடைகளை வழங்கி, திருக்கோயில்களைச் சார்ந்த அறக்கட்டளைகளின் முதலீட்டைப் பெருக்கினர். முடியுடை அரசர்கள் நிவந்தங்கள் வ்ழங்கினர்; இறையிலி நிலங்களை வழங்கினர். திருக்கோயில் பத்திமையின் விளைநிலம்! திருக்கோயில் வாழ்க்கைக்குக் காப்புறுதி வழங்கிய முறை மன்றம்! தமிழ்நாட்டு வரலாற்றில் திருக்கோயில் ஏற்ற பங்கு அளவற்றது! காலத்தை வென்று நிற்கக்கூடியது! இன்றும் நெறியல்லா நெறியிற் செல்லும் தமிழகம், நெறிப்பட நின்று நேர்பட ஒழுக விரும்பின் திருக்கோயில் சார்பே தேவை. திருக்கோயில் சமுதாய இயக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற பாங்கின் அடிப்படை பில்தான்் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற மூதுரை பிறந்தது.