பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ஜ் குன்றக்குடி அடிகளார்

சமுதாய மையம

தமிழ்நாட்டில் நகர அமைப்பு, சிற்றுார் அமைப்பு முறை வளர்ந்த ஒண்று! நடுவூரில் திருக்கோயில் உயர்ந்து விளங்கும்! திருக்கோயிலைச் சுற்றி நான்கு புறமும் மக்கள் சூழ்ந்து வாழ்வர், நான்கு திசைகளிலிருந்தும் மக்கள் திருக்கோயிலுக் குள் வந்து குழும நான்கு திசைகளிலும் பெரிய வாயில்கள்! ஊர் முழுதும் ஒலித்து அழைக்கும் மணிகள். இஃதோர் அற்புதமான அமைப்பு: மாலை நேரத்தில் ஊர் மக்கள் அனைவரும் தத்தம் குடும்பத்தினருடன் அணி பெற ஆலயத்திற்கு வருதலும், வணங்கி மகிழ்தலும் சிறந்த காட்சி! இறை வழிபாடு முடிந்தவுடன் இங்குமங்குமாகத் தனித் தனியாகவும் கூட்டாகவும் ஒருவர் மற்றவரை நலம் விசாரித்தும், கலந்தும் களித்துப் பேசுதலும் மகட்கோடல் முதலிய நிகழ்வுகள் பற்றிப் பேசுதலும் இன்றைக்கும் நடை பெறும் நிகழ்ச்சி. திருக்கோயிலில் ஒரு மனப்பாட்டுடன் மக்கள் கூடுவர்; களித்தும் கலந்தும் பேசுவர். அதனால், திருக்கோயில் வளாகத்துக்குள் அன்பு செறிந்த, அருள் நலம் கனிந்த மனித உறவு வளர்கிறது; மனித நேயம் வளர்கிறது. சில சமயங்களில் அங்கேயே ஒரு கூட்டம் கூடுகிறது. கிராமத்தின் பொது நிகழ்வுகள் கலந்து பேசப்படுகின்றன, குடி மராமத்து, நாள் நிர்ணயித்தல், தண்ணிர் வரும் கால்கள் வெட்டுதல், நல்லேர் கட்ட நாளும் நாழிகையும் முடிவு செய்தல், விதை தெளிக்க நாள் முடிவு செய்தல், இன்னோ ரன்ன ஊரின் தேவைகளையும் ஆய்வு செய்து முடிவு எடுத்தல் நிகழ்கின்றன். இதனால், சமுதாயம் ஒழுங்கமைவு பெறுகிறது. ஓர் அருமையான கூட்டு வாழ்க்கை கால் கொள்கிறது