பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 இ குன்றக்குடி அடிகளர்

வளமான வாழ்க்கை அமைய, துணிவைத் துணையாகக் கொண்டு வளமான வாழ்க்கை காண்போம்!

©Ꮧ©iᎢLᏝᎱTᏛüᎢ வாழ்க்கைக்கு இன்றியமையாதது நோயின்மை. அதாவது பிணியற்ற வாழ்க்கை. நோயென்பது இயற்கையன்று செயற்கை! அதாவது மனிதர்களே வரவழைத்துக் கொள்வது நோய். இயற்கையோடிசைந்து வாழ்ந்தால் நோய் வராது. நமது உடல் எளிதில் நோய் அடைய முடியாத அற்புதப் படைப்பு: ஒரோ வழி நோய் வந்தாலும் தனக்குத்தான்ே நோய் நீக்கிக் கொள்ளவும், புதுக்கிக் கொள்ளவும் கூடிய ஆற்றலுடையது; அமைப் புடையது. ஆயினும் தொடர்ந்து உடலியற்கைக்கு மாறாக அதனை எதிர்த்துத் தகாத உடலியற்கைக்கு மாறாக அதனை எதிர்த்துத் தகாத வழியில் வாழ்க்கை நடத்துபவர்களே பிணியை வரவேற்றுக் கொள்கிறார்கள். நற்காற்றும் கதி ரொளியும் நறுநீரும் உடலுக்கு இன்றியமையாத தேவை. இவற்றை முறையாகத் தூய்மையானதாக உடலுக்குக் கிடைக்கும்படி செய்தால் நோயின்றிப் பல ஆண்டுகள் வாழலாம். ஆதலால், காற்றிலும் கதிரொளியிலும் தோயத் தக்கவாறு உலாவுதல் வேண்டும். உடல் உழைப்புக்குரியது. உழைக்காத உடல் நோய்க்கு இரையாதல் தவிர்க்க முடி யாதது. ஆதலால், உடம்பு வருந்தத்தக்க அளவுக்கு அதற்கு உழைப்பு கொடுத்தாக வேண்டும். வீடு - அலுவலகம் - அலுவலகம் - வீடு என்றிருப்பவர்களுக்கு நோயின்றி வாழ்தல் எங்ஙணம்? ஒரு நாளைக்குக் குறைந்த அளவு எட்டு கிலோ மீட்டர் தூரமாவது நடக்கவேண்டும். அல்லது வீட்டுத் தோட்டத்தில் தங்கள் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய காய்கறித் தோட்டம் அமைத்தாவது வேலை செய்ய வேண்டும். தங்கள் வேலைகளைத் தாங்களே செய்து கொள்ள வேண்டும்.