பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தி குன்றக்குடி அடிகளார்

களாலும் சிந்தனைகளாலும் உள்ளத்தை நிரப்பி, நோயற்ற வாழ்வுக்கு வழி காண்க: கூடி வாழப் பிறந்தார்களிடம் நல்லிணக்கத்தையும் உறவையும் பேணுக! வளமான வாழ்க்கைக்கு நோயற்ற வாழ்வே முதல். திடமான உடல்கொண்ட வளமான வாழ்க்கை வாழ்வோம்!

வாழ்க்கை ஓர் அருமையான கொடை. இந்த வாழ்க்கை முழுவதும் முறையாக வாழ்ந்து முடிப்பது பயனுடையதாக அமையும். புகழ் நிறைந்த வாழ்க்கை, வாழ்நாள் முழுதும் வாழ்ந்தாக வேண்டும். வாழ்நாள் எவ்வளவு என்பதில் இன்னும் வரையறுக்கப்பட்ட முடிவு காணப்படவில்லை. இன்று உலகில் சிலர் 137 வயது வரையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சோவியத் நாட்டு மக்களின் வாழ்நாள் வளர்ந்து கொண்டே போகிறது. இந்தியாவில் 1935-37இல் சராசரி வயது 17 ஆகத்தான்் இருந்தது. இப்பொழுது 58 ஆக, உயர்ந்திருக்கிறது. இனிமேலும் உயரும். ஆக, நீண்ட நாட்கள் வாழ ஆசைப்படுதல் வேண்டும். அதற்கேற்றாற்போல வாழும் நெறிமுறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். நோயற்ற நிலையில், வாழ்க்கை முடியும் காலம் வரையில் திடமான உடலுடன் உழைத்து, உண்ணும் முயற்சியுடையராக வாழ்தல் வேண்டும். இதற்கு, உடலுக்கு உழைப்பு, தரமான நல்லுணவு, தூய்மையான தண்ணiர், தூய்மையான காற்று ஆகியன தேவை. இவற்றுடன் நல்லெண்ணம், நற்சிந்தனை, அன்பினைக் கடமையாகக் கொண்ட வாழ்க்கை தேவை. . -

நாள்தோறும் நல்ல வண்ணம் ஒய்வெடுத்துக் கொள்ளும் பழக்கமும் தூங்கும் பழக்கமும் தேவை. உணவு மிகினும் குறையினும் நோய் செய்தல் போலவே, தூக்கமும் மிகினும் குறையினும் நோய் செய்யும். எந்தச் சூழ்நிலையிலும்