பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 187

பெறும். ஒருவர் அகத்துாய்மை உடையார் என்பதை அவருடைய வாய்மை நிறைந்த ஒழுக்கத்தினாலேயே அறிந்து கொள்ள முடியும். வாய்மை, அகநிலை ஆக்கத்திற்கும் உகந்தது; சமுதாயம் தழுவிய புறத்திணை வாழ்க்கைக்கும் அரண் செய்யவல்லது. அதனால், வாய்மையைவிட வேறொன்றும் உயர்ந்த தில்லை என்று, உயர்ந்த மொழியில் வள்ளுவம் உரைக்கிறது.

"யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற"

என்பது திருவள்ளுவம். வடநூல் வழக்கு, வாய்மையைஉண்மையைச் சத்தியம் என்று கூறும். இன்று கடவுளைமதத்தை மறுப்பது நாத்திகம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஆர்தர் விஞ்ச் என்ற அறிஞன், "உண்மையை மறுத்தல் ஒன்றே நாத்திகம்” என்று கூறுகிறான். எக்காலத் திற்கும் எவ்விடத்திற்கும் ೩೯ðT೯೮೬6 பொதுவானது: பொருந்துவது. வாய்மை நெறி போற்றி ஒழுகியவர்களின் புகழ், என்றும் நின்று விளங்கும். உலகில் பெற்ற எல்லாவற்றையும் இழந்துவிட்டாலும் கூட, நம்மிடத்தில் வாய்மை ஒன்று மட்டும் இருந்தால் போதும்- அதைக் கொண்டு வாழத்தொடங்கலாம்; சாதனைகள் செய்யலாம். வாய்மையென்பது சொல் மட்டுமன்று, வாய்மையே வாழ்வாக மாறவேண்டும். வாய்மையும் அன்பும் வலிமை சான்ற கருவிகள் அல்லது பண்புகள். இவ்விரண்டும் ஒருங்கே அமைந்து விடுமானால் வாழ்க்கையில் வெற்றி உறுதி; வளம் உறுதி.

உண்மை பேசுவது என்பது கூர்ந்து ஆய்வு செய்தால் மிக எளிதான் காரியம். பொய் பேசுவதற்கு வேண்டிய திறமை