பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/173

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் தி 169

இங்ங்ணம் வளர்ந்த வாழ்க்கை, சால்பு நிறைந்த வாழ்க்கை. இத்தகைய சால்பு நிறைந்த வாழ்க்கையே உலக வரலாற்றுக்கு நிலைக்களன். இம்மாபெரும் உலகம் நிலைத்து நின்று இயங்குவதற்குரிய ஆற்றல்.

வாழ்க்கையின் நோக்கம் அல்லது பயன் இன்ப அன்பினை எய்துதல் என்பர். இதனையே முத்தி என்றும் 'வீடுபேறு என்றும் கூறுவர். விடுதலை பெறுதல் வீடுபேறு. ஆன்மா, கட்டுக்களிலிருந்து விடுதலை பெறுவதோடன்றி நிறைநலம் பெற்று இன்ப அன்பில் திளைத்தலே வீடுபேறு. இன்பம் என்பதும் அன்பு என்பதும் தனிப்பொருட் சிறப் புடைய சொற்கள். இறைவனை "இன்பன்காண் துன்பங்கள் இல்லாதான்்கண்' என்று திருமுறை போற்றும், இன்பன் என்று சொன்னால் போறாதா? துன்பங்கள் இல்லாதான்் என்று மீண்டும் கூறியது ஏன்? இன்று நம்முடைய வாழ்க்கை யில் இன்பம் என்று கருதித் துய்த்துக் கொண்டிருப்பவற்றில் துன்பக் கலப்பும் இருக்கிறது. அது மட்டுமன்று. என்றும் இன்பமாக இருத்தலுமில்லை; எல்லோருக்கும் இன்பமாக இருத்தலுமில்லை. இறையின்பமாவது யாண்டும் இன்பம்; எப்பொழுதும் இன்பம்; எல்லாருக்கும் இன்பம். துன்பத் தொடர்பேயில்லாத இன்பம். இன்ப நுகர்வு நிகழ அன்பு தேவை. ஞானப் பெருவாழ்வில் கடவுள் இன்பப் பொரு ளாகவும், ஆன்மா இன்பத்தை நுகரும் அன்புப் பொரு ளாகவும் விளங்குகின்றன. ஆன்மாவினிடத்தில் விளங்கும் து.ாய அன்பைத் துாய்த்தலில் இறைவனுக்கு இன்பம், இன்ப அன்பினை ஆன்மா அடைவதற்கு அறியாமையே தடை அறியாமை என்பதற்கு, ஒன்றும் தெரியாமை என்பது பொருளன்று. தத்துவ உலகில் அறியாமை அதாவது