பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 தி குன்றக்குடி அடிகளர்

நன்மையைத் தீமையாகவும், தீமையை நன்மையாகவும் அறிதல் என்பதாகும். இந்த அறியாமை நீங்குதல் வேண்டும். நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் பகுத்து அறிகின்ற அறிவுத்திட்பம் தேவை. தீமையை விட்டொழித்து விலகு வதற்கும் தீமையை எதிர்ப்பதற்கும் துணிவு தேவை. நன்மையைச் சாதிக்கும் திறன் வேண்டும். ஈண்டு நன்மை என்பது எங்கும் எல்லோருக்கும் எப்பொழுதும் நன்மையாக இருப்பது. "நன்றுடையான் தீயத்தில்லான்” என்ற திருமுறை வாக்கை எண்ணி இன்புறுக. ஆன்மா, இன்ப அன்பினை அடைய பத்திமைத் துணை செய்யும். ஆனால் பக்தி முதிர்ந்து முதிர்ந்து ஆன்மா ஞானத்தை அடைதல் வேண்டும். ஞானத்தாலன்றி வீடுபேறு இல்லை என்பது மெய்கண்டார் வாக்கு. ஞானம் என்பது உயர்வற உயர்ந்த அறிவு: அறியாமைக் கலப்பில்லாத அறிவு, மயக்கங்கள் கடந்த அறிவு. சிந்தையுள் தெளிவதே தெளிவினுட் சிவமாக இறையாகத் தேர்ந்து வளம் தெளிவதே ஞானம். இத்தகு ஞானப் பெருவாழ்வே வளம் நிறைந்த வாழ்வு. இந்த அளப்பரும் ஞானமுடைய வளம் பொருந்திய வாழ்வை மண்ணில் காண்போம்!

வளமான வாழ்வு இன்றியமையாதது, ஒவ்வொருவரும் வளமான வாழ்வு வாழவேண்டும். மக்கட் சமுதாயம் முழுதும் வளமாக வாழும் சூழ்நிலை உருவானால்தான்் தனிமனித குடும்ப வாழ்க்கைகள் வளமாக அமைய முடியும். மழை பெய்து மண் குளிர்வதுபோல், மண் குளிர்ந்து செடிகள் தழைப்பது போல், சமுதாயம் தழைத்து வளர்ந்தால்தான்் தனிமனிதர் வாழ்வு வளமாக அமைய முடியும், மக்கட் சமுதாயம் வளமுடன் அமைய, நாடு வளமுடையதாக