பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 17

சாலையும் மருத்துவம் கற்பிக்கும் கலாசாலையும் நிர்வகிக்கப் பெற்றன. அவற்றில் ஓராண்டுக்குத் தேவையான மருந்து வகைகள் இருந்தன. ஒரு மருத்துவனும் சல்லியக் கிரியைஅறுவை மருத்துவம் பண்ணுவானும் அங்கு இருந்தனர். நோயாளிகட்குத் துணையாக மருத்துவப் பணி மகளிர்தாதியர் பலர் இருந்தனர்; மருத்துவருக்குப் பெயர் "கோதண்டராமன் அஸ்வத்தாமப்பட்டன்” என்று பலவேறு செய்திகளைக் குறிப்பிடுகிறது.

r மேலும் தஞ்சையில் குந்தவைப் பிராட்டியாரால் அவர் தந்தை முதலாம் இராசராசன் நினைவாக, இலவச மருத்துவச் சாலை நிறுவப் பெற்றதாக அறிகிறோம். திருவிசலூர், திருப்புகலுர், திருச்சி மாவட்டம் கோவந்த புத்துர், குன்றத்துார், மைசூரைச் சார்ந்த சுகடுர் முதலிய இடங்களில் எல்லாம் திருக்கோயில்கள் மருத்துவச் சாலைகள் அமைத்து மக்கட் பணி புரிந்தமையைத் தெள்ளத் தெளிய அறியலாம்.

ஊராட்சி மன்றம்

பழங்காலத் தமிழராட்சி முறை இன்றைய ஆட்சி முறையைப் போல அதிகாரம் ஓரிடத்தில் மையப் படுத்தப்பட்ட ஆட்சி முறையன்று. அதிகாரங்கள் முறைப் படுத்தப்பெற்று, பரவலாக்கப் பெற்றிருந்த ஊராட்சி மன்றங்களே ஊராட்சியின் மேலாண்மைக்கு பொறுப்பேற் றிருந்தன. அரசு, மக்களைச் சலுகைகளால் வளர்க்கவில்லை, உரிமைகளால் வளர்த்தது. திருக்கோயில்களில் ஊராட்சி மன்றங்கள் அமைந்திருந்தன. அவை, ஊராட்சியின் மேலாண்மைக்குரிய பணிகளைத் திறம்படச் செய்தன. நீர் நிலைகளை ஆழப்படுத்துதல், நீர்நிலைகளைத் தூய்மையாகப் பேணுதல், காடுகள் வளர்த்தல், அவ்வப்பொழுது மக்கள்