பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் ஜ் 21

திருக்கோயில் வளாகத்திலேயே களவியல் ஒழுக்கத்திற்குரிய வாயில்கள் கிடைத்தன. சுந்தரர் பரவையாரைத் திருவாரூர்த் திருக்கோயிலில் கண்டு காதல் கொள்கின்றார். அங்ங்ணமே பரவையாரும் காதல் கொள்கின்றார். திருக்கோயிலைச் சார்ந்து வளர்ந்த காதல் தத்துவத்தில், ஊனுடம்பின் கவர்ச்சியில்லை; அகனமர்ந்த காதல்; அருட் சார்புடைய காதல் இருந்தது. சுந்தரர் பரவையார் காதல் எப்படியிருந்தது? "கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ அற்புதமோ சிவனருளோ அறியேன்”

என்று பரவையாரைக் கண்டு சுந்தரர் அதிசயிக்கின்ற செய்தியினையும்,

"முன்னேவந் தெதிர்தோன்றும் முருகனோ பெரு கொளியால் தன்னேரில் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ மின்னேர்செஞ் சடையண்ணல் மெய்யருள்

- பெற்றுடையவனோ என்னே! என் மனந்திரிந்த இவன் யாரோ"

என்று சுந்தரரைக் கண்டு பரவையார் நினைந்த செய்தி யினையும் திருத்தொண்டர் புராணம் சிறப்பித்துக் கூறும்.

சுந்தரர், சங்கிலியாரைக் காதலித்துத் திருமணம் செய்தது திருவொற்றியூர் திருக்கோயில் வளாகத்திலேயாம். ஆதலால் திருக்கோயில் திருவளாகம் அகனைந்திணை வாழ்க்கையின் பண்ணையாக விளங்கியது திருக்கோயில் பொலிவு திருமணப் பொலிவாக விளங்கும் தன்மையது. இன்றும் இறைவன் ஆண்டுதோறும் திருமணம் செய்து கொள்கிறான். என்ன? ஆண்டுதோறும் புதுப்புதுத் திருமணமா? இல்லை, இல்லை. திருமண நாளை நினைவு