பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் 27

நிமிர்ந்தார். தாடகையார் மானம் காப்பாற்ற வளைந்தார்; குங்குலியக் கலயர் உடலைப் பாதுகாக்க நிமிர்ந்தார்.

    • **** ... மாலை சாத்தும் தாடகைமானம் காப்பான் தாழ்ந்து, பூங்கச்சிட்டு ஈர்க்கும் பீடுறுகலயன் அன்பின் நிமிர்ந்த எம்பிரான் ஊர்

என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

திருநீலநக்கநாயனாருடைய மனைவி, சிலம்பி நீங்க, வாயால் ஊதியதை அன்பின் விளைவாக ஏற்றுக் கொண்ட அருமைப்பாட்டையும் பிறிதொரு நிகழ்விற் காண்கிறோம். கண்ணப்பர் அன்பினால் விளைந்து, அன்பே உருவமாக விளங்கியதைத் திருக்காளத்தித் திருக்கோயிற் சூழலில் காண முடிகிறது! திருக்காளத்தித் திருக்கோயிற் சூழலில் விளைந்த அற்புதங்கள் எண்ணற்றவை. அவையனைத்தும் ஆன்மாக் களை உயர்நெறியில் உய்த்துச் செலுத்தக் கூடியவை !

திருத்தொண்டுப் பயிற்சி

திருக்கோயில் உயர்ந்து விளங்கியது தொண்டின் அமைப்பால் ! திருநெறிய திருத்தொண்டு திருக்கோயிலைக் கண்டது. திருக்கோயில் திருநெறிய திருத்தொண்டை வளர்த்தது. திருக்கோயிலைச் சார்ந்து நடைபெற வேண்டிய தொண்டுகள் செய்வதற்குப் பயிற்சிப் பள்ளி ஒன்றைக் கணநாத நாயனார் நடத்தினார். திருக்கோயிலைச் சார்ந்து திருமாலை தொடுத்தல் முதல், சுவைமிக்க திருவமுது படைத்தல் வரை பல்வேறு தொண்டுகள் நடை பெற்று வந்துள்ளன. இதனை,