பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் தி 29

முறை மன்றம்

வழக்குகள் வாராமல் வாழ்தல் நன்று. வரவேற்கத் தக்கது. ஆனால் மனித நேயத்தைவிடப் பொருளும் நுகர்வும் முதன்மை பெற்று விடும் பொழுது வழக்குகள் வராமற் போகா. வழக்கிற்குப் போகக் கூடாது; அடாவடித் தனமான வழக்குகள் வந்துவிட்டால் சந்திக்காமலும் இருத்தல் கூடாது. ஆனால் உலகியல் மரபில் வளமுடையோர் வளமில்லா தாரை வழக்கில் மாட்டி வைத்தே அமுக்குகின்றனர்; அழிக்கின்றனர். வசதியும் வாய்ப்புமில்லாதார் வழக்காட முடியாமல் தவிக்கின்றனர். இதனைக் கருதித்தான்் இன்று வாய்ப்பற்றவர்களுக்கு வழக்காட "இலவசச் சட்ட உதவி” என்ற இயக்கம் தோன்றியிருக்கிறது. அரசே இந்த இலவசச் சட்ட உதவியை வழங்குகிறது. பழங்காலத்திலேயே நமது திருக்கோயிலைச் சார்ந்த வாழ்க்கை முறையில் இந்த முறை, கால் ஊன்றியிருக்கிறது. மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன், மாமனாக வந்து வழக்காடி வெற்றி பெற்றுத் தந்துள்ளான். திரும்புறம்பியத்தில் திருமணம் செய்து கொண்ட செட்டிப் பெண்ணுக்கு, மதுரை இறைவன் சிவலிங்கத்தையும், கிணற்றையும், வன்னி மரத்தையும் வந்து சாட்சியமாக்கி அவளது துன்பம் துடைத்தான்். திருக்கோயில் சூழலில் வழக்குகள் வரா வாழ்க்கைகள் நடந்தன. ஒரோவழி வழக்குகள் வந்த பொழுது எளிதில் தீர்வு காணப் பெற்ற அருமைப்பாட்டினையும் அறிக. -

தொழிலில் சமத்துவம்

திருக்கோயிலைச் சார்ந்து வாழ்ந்த சமுதாய

அமைப்பில் பல்வேறு குல அமைப்புகள் இருந்தன. அவற்றுக் கிடையே சிற்சில வேறுபாடுகளும் இருந்தன. குலநெறி