பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ஜீ குன்றக்குடி அடிகளார்

பாடற் பரிசு படைத்தருளினான் என்று மாணிக்கவாசகர் கூறினார். இங்ங்ணம் சமய உலகில் இசை ஏற்றம் பெற்றி ருந்தது. திருமுறைகள் அனைத்தும் பண் சுமந்த பாடல்களே! இசைப் பாடல்களே! தமிழோடு இசை கலந்த இப்பாடல் களைக் கேட்க இறைவன் பெரிதும் விரும்பினான். "தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினான்” இறைவன். இத்தகைய திருமுறை இசைக்கலை, திருக்கோயில் களை மையமாகக் கொண்டே வளர்ந்தது. இறைவன் புகழ் பாடும் பண்ணிறைந்த பாடல்களாகத் திருமுறைப் பாடல்கள் விளங்குகின்றன.

இறை நலம் சான்ற இன்பத்தமிழிசைப் பாடல்களாகத் திருமுறைப் பாடல்கள் இருந்தமையால் இறைவனே இத்திருப் பாடல்களுக்குச் சான்று செய்தான்். "தனதுரை” யென ஒப்பம் தந்தான்். அதனால் இத்திருப்பாடல்கள் ஐந்தொழில்களையும் நிகழ்த்தும் ஆற்றலுடையனவாய் இருந்தன. நீரையும் நெருப் பையும் வென்று விளங்கின.

"பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும் காலனைஅன் றேவிக் கராங்கொண்ட-பாலன் மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தம் கரணம்போல் அல்லாமை காண்”

என்று திருக்களிற்றுப்படியார் சிறப்பித்துக் கூறும்.

தமிழர் தம் சமய வாழ்க்கையில் பண்ணிசையும் பரதக் கலையும் நிலையான இடம் பெற்றவை; பெருமை சேர்த்தவை. அதனால் பிற்காலத் தமிழரசர்கள் இத்திரு முறைப் பண்ணுக்கு நிறைந்த ஆக்கமளித்தனர். குறிப்பாக மாமன்னன் இராசராச சோழன் தமிழ்ப் பகைவரின் குதிலிருந்து திருமுறைகளை மீட்டுத் தந்தான்். தான்்