பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஜீ குன்றக்குடி அடிகளர்

"சிறைவான் புனல் தில்லைச் சிற்றம் பலத்தும், எம் சிந்தை யுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின்

ஆய்ந்தஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ? அன்றி ஏழிசைச் சூழல் புக்கோ? இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே."

என்று வரும் திருக்கோவையார் திருப்பாடல் ஏழிசைச் சூழல் என்று குறிப்பது அறிக. தமிழிலக்கியங்களிற் பல, இசைக்கலை தழுவியன. இசை, உயிர்! பாடல், உடல்! "பண் என்னாம் பாடற்கு இயை பின்றேல்” என்று திருக்குறள் கூறும் திருக்கோயில் வளாகத்தைச் சுற்றித் தமிழிசை வளர்ந்தது. பண்ணொன்றைப் பாடிப் பரிசில் பெற்றனர் பலர். இறைவனைத் துரதாக நடக்கச் செய்தது, சுந்தரரின் இசைத்தமிழ். எலும்பைப் பெண்ணுருவாகக் கண்டது திருஞானசம்பந்தரின் இசைத்தமிழ். திருமறைக் காட்டுத் திருக்கதவம் திறந்தது அப்பரடிகளின் பண்ணிசைத் தமிழ். இங்ங்ணம் தமிழிசை, திருக்கோயில்களைத் தழுவியிருந்த சமுதாயத்தின் துயரங்களைத் துடைத்து வாழ்வித்த வரலாறுகள் இவை.

இசை, மக்களின் வாழ்க்கையில் எழுச்சியும் ஏற்றமும் மிக்க உணர்வுகளைத் தந்து வழிநடத்தியது. திருக்கோயில் களில் வளர்ந்த பண்ணிசையில் கற்பனை வளமும் எடுப்பும் உண்டு. தருமபுரத்தில் பாடிய யாழ்முரிப்பண் இதற்கு ஒர் எடுத்துக்காட்டு! இவ்வாறு தமிழினத்தின் வரலாற்றை உந்திச் செலுத்திய பெருமை திருமுறைப் பண்ணிசைக்கு உண்டு.