பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தி குன்றக்குடி அடிகளர்

"சாருந் தவத்துச் சங்கிலிகேள்

சால வெண்பா லன்புடையான் மேரு வரையின் மேம்பட்ட

தவத்தான்் வெண்ணெய் நல்லூரில் யாரு மறிய யானாள

உரியான் உன்னை யெனையிரந்தான்் வார்கொண் முலையாய் நீயவனை

மனத்தா லணைவாய் மகிழ்ந்தென்றார்"

(பெ. பு. ஏயர்கோன்-2839)

என்பார் சேக்கிழார் பெருமான். இதில் வியப்பு என்ன வென்றால், சங்கிலியாரிடத்தில் இறைவன், சுந்தரர் பரவையாரைத் திருமணம் செய்திருப்பதைக் கூறவில்லை. நன்னெறியும் நட்பு நெறியும் ஒரோ வழி முரண்படுவதுண்டு. அப்பொழுதெல்லாம் நன்னெறியைவிட நட்பு நெறிக்கே முன்னுரிமை தர வேண்டும். அதனால், நன்னெறியைத் துறத்தல் என்பது பொருளன்று. நட்புறவில் உடன்போய் பின் நன்னெறியில் நிறுத்தலே நட்பின் பாங்கு. இக்காரணத்தால் நன்னெறியை முன்னிட்டு நட்பு நெறியைப் பாதிக்க விடலாகாது. சுந்தரரை மணக்கச் சங்கிலியார் இசைகின்றார். சங்கிலியார் சுந்தரர் மனையறம் சில ஆண்டுகளேனும் நடைபெற வேண்டுமே என்று கருதித் திருவுளம் கொண்டார். ஆதலால், திருவொற்றியூரிலிருந்து பிரிந்து செல்வதில்லை என்று சுந்தரரிடம் உறுதிமொழி கேட்கும்படி சங்கிலியாருக்குச் சொல்லிக் கொடுக்கிறார். இளமை நலம் கொழிக்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் இறைவனுக்குள்ள திருவருள் என்னே! இவையெல்லாம் வாழ்வியலின் நுண்ணிய கலையாகும்.