பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ; குன்றக்குடி அடிகளர்

கோயிலை எடுப்பித்து முடித்த பிறகு வெட்டி வைத்த கல்வெட்டில் பின்வருமாறு பொறித்து வைத்துள்ளான்.

"ஆராயினும் இந்தத் தென்காசி

மேவும் பொன் ஆலயத்து வாராத தோற்குற்றம் வந்தால்

அப்போதங்கு வந்து, அதனை நேராக வேயொழித் துப் புரப்

பார்களை நீதியுடன் பாரா ரறியப் பணிந்தேன்

பராக்கிரம பாண்டியனே."

என்பது அக்கல்வெட்டுப் பாடலாகும்.

. ஆதலால் நாமனைவரும் நம்முடைய திருக்கோயில் களைக் கண்ணெனப் பேணுவோமாக! இத்திருக்கோயி லுக்குப் பகை, திருக்கோயில் மதிற்கோபுரங்களில் செடி கொடிகள் முளைத்தலாகும். இவற்றை உழவாரம் கொண்டு அவ்வப்போது அகற்றுவோமாக! சிற்பங்களையும் ஒவியங் களையும் பாதுகாப்போமாக! திருக்கோயில் துய்மை, நமது தூய்மை. திருக்கோயில் பேணல் ஒரு கலைத்தொண்டு. திருக்கோயில் நிறுவனம் அன்று: அஃது இயக்கம்; அஃது ஒரு கலைச் சூழல். நமது வாழ்வியலோடு கலந்த கலைச் செல்வமாகிய திருக்கோயிலை நாளும் பேணுவோமாக!