பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 ; குன்றக்குடி அடிகளார்

தான்் ஆய்வு, சார்பு வழி அமையாது நடுவு நிலையில் நடைபெறும். எந்த ஒரு கருத்தையும் ஆய்வு செய்ய, வரலாறு முதல் அளவையாக எடுத்துக் கொள்ளப் பெறுதல் வேண்டும். இரண்டாம் இடத்திலேயே நூல்கள் எடுத்துக் கொள்ளப் பெறுதல் வேண்டும். நூல்களுள்ளும் காலத்தால் பிந்தித் தோன்றியவையாயினும் தகுதியால் சிறந்த நூல்களே அளவை நூல்களாக எடுத்துக் கொள்ளப் பெறுதல் வேண்டும். வரலாற்று வளர்ச்சியின் அடிப்படையிலும் காலத்தின் தேவைகளுக்கு ஈடு தரும் வகையிலும் வேறுபாடுகள் இருத்தல் இயற்கை. ஆதலால் முன் எழுந்த நூல்களினும் பின் எழுந்த நூல்களுக்கு அதிகச் சிறப்புக் கொடுத்து ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுதலே ஆய்வு மரபு.

இந்த அடிப்படையில் விழாத் திருக்கோயில் வழிபாட்டு அமைப்பினை ஆராய்ந்தால் கிறித்து பிறப்பதற்கு முன்பே தமிழர்களிடையில் திருக்கோயில் வழிபாடு இருந்த தாகத் தெரியவருகிறது. கடல் கொண்ட தென்குமரி நாட்டில் திருக்கோயில்கள் இருந்தன. இறைவன் மகேந்திர மலையிலிருந்து ஆகமம் அருளிச் செய்ததாகத் திருவாசகமும் போற்றுகிறது. மகேந்திரமலை குமரிக் கண்டத்திலிருந்ததே யாம்." இறைவன் மகேந்திர மலையில் அருளிச் செய்த ஆகமம் வழி வழி தமிழ் முனிவர்களால் வழக்கில் கொண்டு வரப் பெற்றிருக்க வேண்டும். காலப்போக்கில் அந்த ஆகமங்கள் சரிவரப் பேணி வைக்கப்பெறாமல் மறைந்து இருக்கின்றன. இன்றுள்ள ஆகமங்களில் சில, தமிழ் முனிவர்கள் செய்தவை என்ற கருத்தும் உண்டு. ஆகமத் தொடர்பான செய்திகள் விருப்பமும் வேட்கையுமுடைய வர்க்கே புலப்படவேண்டும் என்ற குறிப்பில், ஆரிய மொழியில் செய்து வைத்தனர் என்பர்’ இதற்கு அரண்