பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் ; 87

வாலி பூசித்தது "வாலீச்சுரம்” என்றெல்லாம் திருத்தலப் புராணங்கள் உள்ளன. இவ்வாறு இவர்கள் பூசித்த செய்திகள் திருமுறைகளில் இடம்பெற்றுள்ளன. இவை மட்டுமா? ஓரறிவுயிர்கள் முதல் ஐயறிவுயிர்கள் வரை பூசித்துள்ளன: திருவானைக்காவில் யானையும் சிலந்தியும் பூசித்துள்ளன. எறும்பு பூசித்த திருத்தலம் திருவெறும்பியூர். நண்டு பூசித்தவூர் திருநின்றவூர். பசு பூசித்த தலம் திருவான்மியூர். புள் பூசித்த திருத்தலம் புள்ளிருக்கு வேளுர். இவ்வாறு தல வரலாறுகள் இந்த உண்மையைக் கூறுகின்றன. இச்செய்திகளை வள்ளற் பெருமானும் எடுத்துக் கூறி நடத்துகிறார்” எனவே தீக்கை பெற்றவர்கள் - தகுதியுடையவர்கள் - விரும்புகிறவர்கள் ஆன்மார்த்தமாகத் திருக்கோயிலுக்குள் எழுந்தருளியுள்ள இறைவனை வழிபாடு செய்து கொண்டனர் என்பதுதான்் உண்மை. ஆதலால் நமது கருத்தினை அடியிற்கண்டவாறு தொகுத்துத் தருகின்றோம்.

1. பன்னிரு திருமுறைகளுக்கும், மெய்கண்ட சாத்திரங் களுக்கும் மாறுபாடல்லாத சிவாகமச் செய்திகள் ஏற்புடையன.

2.

சைவ நெறியில் விதிக்கப் பெற்றுள்ள தீக்கை முறைகள் எந்தவித வேறுபாடுமின்றி அனைவருக்கும் உரியன. சைவ தீக்கை பெற்றவர்கள் ஒரு குலமாக-சைவ குலமாக-ஆகின்றனர். இந்த அடிப்படையில் தான்் 'ஒன்றே குலம் என்று திருமந்திரம் பேசுகிறது.

3. தீக்கைகள் பெற்றவர்கள் சிவாகமங்கள் ஒதவும், திருக்கோயிலில் அவர்கள் பெற்ற தீக்கிைகளுக் கேற்றவாறு சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய