பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் 91

துய்மையற்றவைகளையும் தூய்மையாக்கிக் கொள்ளும் பொழுது, இறைவனை தாழ்த்தப்பட்டவர்கள் தொடுவதால் திருவருட் பொலிவு குறையாது. அப்படிச் சொல்லுபவர்கள் கடவுள் தத்துவத்தை முற்றாக அறிந்தவர்கள் ஆகமாட் டார்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் இங்கு நினைவு கூரத்தக்கது” எந்த வகையிலும் நமது சமுதாயத்தில் பிறப்பின் காரணமாக உயர்வு தாழ்வுகளைக் கற்பிப்பதும் ஒரு சாராரை இழிவுபடுத்துவதும், மற்ற மதங்களுக்கு அனுப்பிக்கும் கொடுமையும் உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும். "மெய்வைத்த சொல்” என்றும் "மறை” என்றும் பாராட்டப்பெறும் திருக்குறள் கூறும் பொதுநெறி' காணல் இந்த நூற்றாண்டின் கடமை.

ஆதலால், இன்றைய நிலையில் அரசு ஒரு தக்க சமய வளர்ச்சிக் கருத்தரங்கு மாநாட்டைக் கூட்டி, மேலும் சரியான முறையில் இச்செய்தியை அணுகி திருமுறை களுக்கும், மெய்கண்ட சாத்திரங்களுக்கும், சிவாகமங் களுக்கும் முரணில்லாமல் சிந்தித்து, கருத்தாய்வு செய்து செயற்படுத்துவது தவறாகாது. -

அங்ங்னம் செய்ய நினைக்கும்பொழுது வழி வழியாக பூசை செய்துவரும் சிவாச்சாரியார்களைக் கவனத்தில் கொண்டு, அவர்களுக்குரிய முன்னுரிமையையும் தரும்படி செய்வது சமுதாயப் பாங்கான கடமையாகும்.

கட்டுரையில் வரும் எண்களுக்குரிய விளக்கங்கள்

1. பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி காலம்: கி.மு

25 (ந.சி.க) -