பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஆலேக் கரும்பு தவனென்று பெருமை பேசும் மனிதன் கூட மரண காலத் திலே படும் வேதனையை வெளியிடுவதில்லை; வெளியிடும் ஆற்றல் அவனுக்கு அப்போது இருப்பதில்லை. எமன் பாசம் வீசும்போது மனிதனுடைய உடம்பு படும் வேதனே பார்க் கிறவர்களுக்கே சகிப்பதில்லையே! - யம பயமும் மரண வேதனையும் போன்ற சிந்தனை களே அந்தக் கரும்பு ஆலே உண்டாக்கிவிட்டது. அவர் மெல்ல நகர்ந்தார். வானத்தை அண்ணுங்து பார்த்தார். நீல வானத்தில் இளம்பிறை முளைத்திருந்தது. மற்ற நாட்களில் அந்த இளம்பிறையின் அழகை வெவ் வேறு வகையில் அநுபவித்தவர் அந்தக் கவிஞர். இப்போது ஆலேக் கரும்பு படும் அவஸ்தையைக் கண்டு, யம பாசத்தால் இழுக்கப்படும் மனிதனுடைய அவஸ்தையை கினைத்துக் கொண்டவராதலால் அந்தக் கற்பனேக்கு இனமான திசையில் அவர் மனம் ஓடியது. அந்த இள்ம் பிறையைக் கண்டு அகத்திப் பூவை அவர் கினேக்கவில்லை; யானேத் தந்தத்தை உவமையாக எண்ணவில்லை; விநாயகருடைய கொம்பையும் ஒப்பாகக் கருதவில்ல. அவருக்கு யமனுடைய கோரப் பல்லே நினைவுக்கு வந்தது. இருளினிடையே முளைத்த இளம் பிறை கரிய உடலையுடைய கமனுடைய கடைவாயின் கோரப் பல்லாகவே தோன்றியது. சற்று முன் தான், கமன் வன் பாசம் வீச, உடலம் ஆலைக் கரும்புபோல வேதனைப்படுவதைக் கற்பனைக் காட்சியாலே கண்டுவந்தவ ராதலின், இப்போது அந்த மனுடைய கோரப்பல்கல் இளம்பிறையுருவிற் கண்டார். அவர் மரண பயம், மரண வேதனை. யமனுடைய கோரப் பல், யம் பாசம் என்ற பயங் கரமான எண்ணங்களிடையே மனம் குழம்பி கின்ருர். அப்போது ஒரு கருடன் பறந்து வேகமாகச் சென்றது. திருமாலின் வாகனமல்லவா அது? கருடனக் கண்டவுடன்