பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகை செய்யும் நங்கை பெண்களுக்கு ஆடையிலும் அணியிலும் அளவற்ற ஆசை. கனந்தங்கிய பொருள்களைச் சுமக்க மாட்டாத மெல்லியலார் அவர்கள். ஆனல் பொன்னணிகள் எவ்வளவு கனமாக இருந்தாலும் தாங்குவார்கள். அந்தக் கனம் எதையோ சுமக்கிற மாதிரி இராது. பூப்போல இலேசா கவே இருக்கும். அதுமாத்திரமா? அவற்றைச் சுமப்பதில் இன்பம் கூடக் கானுவார்கள். - - ஒரே நகையைப் பல காலம் அணிந்திருப்பதில் அவர் களுக்கு விருப்பம் இருப்பதில்லை. அடிக்கடி மாற்ற வேண்டும் அழித்து அழித்துச் செய்ய வேண்டும். இதல்ை ஆகும் சேதாரத்தைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. பொருளாதாரக் கண்கொண்டு பார்க்கிறவர்களுக்கல்லவா சேதாரக் கணக்கு வேண்டும்? கை பண்ணுவதில் அவர்களுக்கு உள்ள ஊக்கத்தை என்னவென்று சொல்வது தட்டானுக்கு அருகில் தாமே இருந்துககையைச் செய்விக்க ஆசைப்படுவார்கள். அதுவும் கிராமமாக இருந்து விட்டால் சொல்லவே வேண்டாம்; தட்டான் பட்டறையிலே படுகாடாகக் கிடப்பார்கள். நகை . செய்யும் தட்டான் படும் சிரமத்தைவிட அவர்கள் படும் சிரமங்தான் அதிகமாக இருக்கும். * . . " இந்தக் காட்சியைக் குமரகுருபரமுனிவர் எங்கேயோ பார்த்திருக்கிருர் யாரோ ஒரு பெண்மணி தட்டான் பட்டறையில் கண்ணே விழித்துக் கொண்டு வேறு நினைவே