பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘விளக்கிட்டு இரு' நகரங்களில் விடு கிடைக்காமல் மக்கள் திண்டாடு கிருர்கள். புருக்கூட்டைப் போலச் சில இடங்களில் ஜனங்கள் அடைந்து கிடக்கிரு.ர்கள். வீடு கிடைக்காத காரணத்தால் கல்யாணம் பண்ணியும் பிரமசாரியாக வாழ் கிறவர் சிலர். கிராமங்களிலிருந்து வரவர் மக்கள் நகரத் துக்கு வந்துகொண்டே இருக்கிருர்கள். அதனல் ககரத் தில் இட கெருக்கடி மிகுதியாகி வருகிறது. ஆனல் கிரா மத்திலோ குட்டிச்சுவர்கள் அதிகமாகி வருகின்றன. படித்தவர்கள் வெளியூர்களுக்கு உத்தியோகத்துக்குப் பேர்ய்விடுகிருர்கள். பணக்காரர்கள் நகர வாழ்க்கையில் மோகம் கொண்டு போய்விடுகிருர்கள். இதல்ை கிராமங் களில் வீடுகள் பல பூட்டிக் கிடக்கின்றன. யாராவது அந்த வீடுகளில் குடியிருக்கிறேன் என்று சொன்னல் மேள தாளத்தோடு இருங்கள் என்று மகிழ்ச்சியோடு வரவேற் கிறவர்கள் இருக்கிருர்கள். வந்தவர் கேட்கிருர் ," ". . . . " - ஏதோ உங்களுக்குத் தோன்றியதைக் கொடுங்கள். வீட்டில் விளக்கு வைத்துக் கொண்டிருந்தால் போதும்" என்று வீட்டுக்குடையவர் சொல்கிருர் பரம்பரையாக வாழ்ந்துவரும் வீடாதலால் அதில் இருள் படரும்படி மூடிவைக்க விரும்பமாட்டார்கள் சில செல்வர்கள். தாங்களும் குடியிருக்கமாட்டார்கள். அதனல் யாராவது ஏழையைக் குடிவைத்து, "வீட்டைப் பெருக்கி