பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலேக் கரும்பு 5 அவருக்குக் கருடவாகனப் பிரானுடைய நினைவு வங்தது. கருடனேக் கையெடுத்துக் கும்பிட்டார். மரண பயமும் யம வாதனேயும் உயிர்களுக்கு ஏற்பட்டாலும் அந்த வேதனே களிலிருந்து காப்பாற்றக் கருளுமூர்த்தியாகிய கருட வாகனன் இருக்கிருன் என்ற உணர்ச்சி வந்தது. இதற்கு முன் இருந்த பயங்கரமான கற்பனை மாறி இனிய கற்பனை எழுந்தது. புள்ள ரசின்மேல் எழுந்தருளும் கருணைக்கடலேச் சிந்தித்தார். - அவனும் கருநிறமுடையவன்தான்; சமுத்திரத்தைப் போன்ற கிறம், கருணையிலும் அவன் கடலைப்போன்ற வன். கடலேப்போலப் புலவும் உவர்ப்பும் உள்ளவன் அல்ல; புனிதமானவன். அவனுடைய கருணையை என்ன வென்று சொல்வது ! இந்திராதி தேவர்களுக்கெல்லாம் தலைவன் அவன். அவர்களுக்கெல்லாம் அமுதம் கடைந்து அளித்தவன். அவர்கள் யாவரும் தங்கள் ஆற்றலால் அமுதத்தைக் கடைந்துவிடலாம் என்று கினைத்து ஆரம்பித்தார்கள். குழந்தைகளின் விளையாட்டைக் கண்டு களிக்கும் தாய்போல அவன் அதைப் பார்த்துக்கொண்டிருந்தான். குழந்தைகள் முடியாமல் களப்படையும்போது ஒரு கை கொடுக்கும் தாயைப்போல அமரர்கள் தவிக்கும்போது ஒரு கைகொடுத் தான். அமுதம் எழுந்தது. அதற்குத்தான் என்ன போட்டி! அசுரர்கள் ஆரவாரத்தோடு போட்டியிட்டனர். இறைவன் அவர்களுக்குப் போக்குக் காட்டி இந்திராதி தேவர்களுக்கு அமுதமாகிய விருந்தை அளித்தவன். - அவ்வளவு சிறந்த வள்ளல்.ஓரிடத்துக்கு விருந்துண்ண வந்தான். ஒரு குடிசையில் விதுரன் அளித்த விருந்தை அருந்த வந்தான். 'இந்திரன் முதலியவர்களுக்கு அமுத விருந்தை அளித்தோமே நாம் இங்கே வந்து உண்ண வாவது' என்று எண்ண வில்லை. விதுரனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/11&oldid=744355" இலிருந்து மீள்விக்கப்பட்டது