பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 ஆல்க் கரும்பு கூறலாம்? இயல்பாகவே வெள்ளேயான ஒரு பொருள் இருந்தால் உவமை கூறலாம். - கலைஞன் எத்தகைய நுட்பமான உணர்ச்சியானலும் உணரக்கூடியவன். வைரத்தின் கூறுகளே நிறுப்பதற்கு மிக மிக நுட்பமான தராசை ஆளுவார்கள். எல்லாவற்றையும் விட் நுட்பமான தராசு போன்றது கலைஞன் உள்ளம்; மிக மிக மென்மையானது. வெண்ணிறமான பொருளைக் கலைஞன் உள்ளத்துக்கு உவமை சொல்லும்போது, மென் மையும் இருக்கும் பொருளாகத் தேர்ந்தெடுத்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும். கலைஞன் உள்ளத்தில் பரிவு இருக்கவேண்டும். பரிவு என்றது பற்று அன்று; விருப்பமும் அன்று. எதனையும் ஆர்வத்தோடு உணர முற்படும் இயல்பு அது. அதனதன் கிலையில் வைத்து உணர்வதில் அவனுக்கு ஊக்கம் இருக்க வேண்டும். இல்லையானல் அவனுக்குப் பொருளின் முழு இயல்பும் தெரியாது. இந்தப் பரிவு (sympathy) இருப்ப தல்ைதான் கலைஞன் எந்தப் பொருளையும் கண்டு இன்புறு கிருன் பற்றுக்கு அப்பாற் பட்ட அன்பு அது. எதிலும் ஒட்டிக்கொள்ளும் சரம் அல்லது தண்மை அது. ; : ஆகவே வெண்மை, மென்மை, தண்மை என்ற மூன்று இயல்பும் உடைய பொருள் ஒன்று இருந்தால் விருப்பு வெறுப்பற்ற தாய்மையும், நுட்பமும், பரிவும் உள்ள கலைஞனுண்ட்ய உள்ளத்துக்கு உவமை கூறலாம். இவ் வளவோடு, கலைஞனிடம் கலப் பொருளைப் படைக்கும் ஆற்றலும் இருக்கவேண்டும். நடுநிலையும் நுட்பமும் பரிவும் இருந்தால் காணும் பொருளினிடம் உள்ள இன்பத்தை நுகரும் கிலே அவன்பால் உண்டர்கிறது. கலைஞ னுடைய பாதிப் பகுதிதான் அது. தான் உணர்வதோடு நின்றுவிட்டால் அவனேக் கலைஞன்ென்று சொல்லமாட்