பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலே மடந்தை 1194 இனிய இசையைப் பாடுகின்றன. 'தம்முடைய முரற்சி யில்ை இனிமையான வண்டுகள் சூழ்ந்த மெல்லிய வெண் டாமரை மலரிலே தங்கும் எம்பிராட்டியின் இணையடித். தளிர்கள், சிறிதும் மென்மையையே அறியாத என் மனத் திலே, பாறை போன்ற வலிய மனத்திலே வந்து தங்குமா? என்று அவர் பாடுகிருர். - - என்னை உடையாள், கலமடந்தை, எவ்வுயிர்க்கும் அன்ன யுடைய அடித்தளிர்கள் - இன்அளிசூழ் மென்மலர்க்கே தங்கும் எனஉரைப்பர்; மென்மையிலா வன்மனத்தே தங்குமோ வந்து? - (உடையாள் - அடிமையாக உடையவள். அளி. வண்டு. மலர்க்கே . மலரிலேயே.) இப்பாடல் தண்டியலங்காத்தில் உள்ளது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/121&oldid=744368" இலிருந்து மீள்விக்கப்பட்டது