பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2號 ஆக்லக் கரும்பு 'அவன் யார்? அவன்தான் புத்த பகவான்! 'மைத்து இருள் கூர்ந்த மனமாசு தீரத் தோன்றிய புத்த ஞாயிறு. அவனே மணிமேகலே ஆசிரியர், - - தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் என்றும், தன்.உயிர்க்கு இரங்கான் பிறஉயிர் ஒம்பும் மன்உயிர் முதல்வன் என்றும் போற்றுகிருர் ஒவ்வொரு கணமும், உலகில் உள்ள உயிர்கள் எல் லாம் பிற உயிருக்கு ஏதம் விளக்காமல் இன்புற்று வாழ வேண்டுமென்ற தயா மூலதர்மத்தை அப் பிரான் உப தேசம் செய்தான். மனிதன் மாத்திரம் அன்று, விலங் கினங்களும் பகைத்திறங் கடிந்து வாழவேண்டுமென்று அறம் உரைத்தான் அருளாளன். - விலங்கும் தம்முள் வெரூஉப்பகை நீங்கி உட்ங்குயிர் வாழ்கஎன்று உள்ளங் கசிந்துகத் தொன்றுகாலத்து நின்றறம் உரைத்த, ஆதிமுதல்வன் என்று தமிழ் நூல் புத்த பகவானைப் போற்றுகிறது. ஒரு நாள் புத்த தேவனிடம் ஒரு வியாபாரி வந்தான். உலக வாழ்வில் அறநெறியின்றி வாழும் மூர்க்கர்கள் நிறைந்த குனியப் பிராந்தம் என்னும் இடத்திலிருந்து வந்த வன் அவன். உலகமெல்லாம் இன்ப வாழ்வு வாழ அற வாழி செலுத்தும் புத்த பகவான் பெருமையைக் கேள்வி புற்றுத் தானும் பெளத்த சங்கத்திலே சேரவேண்டும் என்ற ஆசையோடு வந்தான். அவனுடைய உள்ளத் துறவை உணர்ந்தபோதிநாதன். அவனுக்குத் துறவு கிலே அருளிச் சங்கத்தில் சேர்த்துக்கொண்டான். புத்தனையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/124&oldid=744371" இலிருந்து மீள்விக்கப்பட்டது