பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ஆகிலக் கரும்பு "பெருமானே, சங்கத்தின் திருநாமத்தைத் தியானித் துச் சும்மா இருப்பேன். அடிப்பாருக்கெதிரே கை எடேன்." புத்த தேவன் புன்னகை பூத்தான். 'அதுவும் சரிதான். ஆனல் அவர்கள் உன்னைக் கொல்லத் துணிந்தால் என்ன செய்வாய்?" என்று கேட் டான் தயாநிதி. 'சாவுக்கு அஞ்சி வாழ்வை விரும்புபவன் அல்ல நான். . தேவரீருடைப் திரு காமத்தை ஜபித்தபடியே வருவதை ஏற்பேன்" என்று கம்பீரமாக விடை பகர்ந்தான் வணிகன், 'நல்லது! நீ எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றி அடைவாய். போய் வா" என்று அவனுக்கு விடை கொடுத் தருளின்ை புத்த பகவான். - கொலை செய்ய வருவானையும் முறுவல் முகத்துடன் நண்பு பாராட்டும் உள்ளம் படைத்தவன் எவனே, அவனே தயை என்னும் பயிரை விளைவிக்கும் ஆற்றல் உடையவன். 'தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு சிந்தையிற் போற்றும் திருவாளன் எவனே, அவனே உல கத்தில் ஹிம்ஸையை நீக்கும் தொண்டிலே ஈடுபடுவதற். குரியவன். அத்தகைய தயா வீ ரர் கூட்டத் திலே ஓங்கி உயர்ந்து நிற்கிறவன் புத்தர் பிரான். அவனே நம் கர்லத்தி லும் நினைக்கும்வண்ணம் செய்து, பகையிடையே அன்பை யும், குருதி வெள்ளத்திடையே குழையும் அன்புக் கண்ணி ரையும்.போரிடையே அமைதியையும், வேற்றுமையிடையே ஒற்றுமையையும் கிலேகாட்ட வாழ்ந்தார் காந்தியடிகள்.