பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி வளர் காடு அடர்ந்த காட்டில் கொடிய விலங்குகள் வாழும். காட்டில் உள்ள விலங்குகள் மனிதனுடைய ஆணேக்கு அடங்கி ஏவல் புரியும். காட்டு விலங்குகளோ தம்முடைய மனம்போன போக்கிலே உழன்று உலவி உண்டு உறங்கும் வாழ்க்கையை உடையன. மனிதர்களைக் கண்டால் துன்புறுத்தும் இயல்பைப் பெற்றவை அவை காட்டு வழியிலே செல்வதற்கு மக்கள் அஞ்சுவர். வேட்டையாடும் வல்லமை உடையவர்கள் அஞ்சுவதில்லை. ஒரு காட்டில் மதம் பிடித்த யானைகள் இருக்தன. கடும் புலிகள் வாழ்ந்தன. நஞ்சைக் கக்கும் பாம்புகள் ஓடின. கரிகளும் ஓநாய்களும் திரிந்தன. மரத்தின் மேல் குரங்குகள் பாய்ந்தன. கரடிகளுக்கும் குறைவில்லை. மரங்களும் சிறு சிறு குன்றுகளும் அடர்ந்து செறிந்திருக் தமையால் அந்தக் காட்டுக்குள் வழி கண்டுபிடித்துப் போவது மிகவும் அரிதாயிருந்தது. வழி என்று ஒன்று இருக்கால்தானே, கண்டுபிடிப்பதற்கு? மனிதனுடைய காலே படாத கன்னிக்காடு அது. உள்ள்ே கதிரவன் கதிர் புக இயலாது; அத்தனே செறிவு. பகலிலும் இரவிலும் ஒரே இருள் மண்டிக் கிடந்தது. புறத்தே செங்கதிரோன் கதிர் எங்கும் பரவி ஒளிவிடும்; ஆல்ை அந்தக் காட்டினிடையே அப்போதும் இருளே தேங்கி நிற்கும். ஒளி புகும் காடானல் இரவிலேதான் விலங்குகள் விளையாடும். ஆனல் இந்தக் காட்டிலோ அறுபது நாழி கையும் இரவுதான். ஆகையால் விலங்குகளின் கோர தாண்டவத்தை எப்போதுமே அங்கே காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/13&oldid=744375" இலிருந்து மீள்விக்கப்பட்டது