பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஆலேக் கரும்பு இத்தகைய காடு எங்கே இருக்கிறது? ஒவ்வொரு வரிடமும் இருக்கிறது. நெஞ்சமென்னும் இருளடர்ந்த காட்டில் ஆசை, ஆணவம், பொருமை, கோபம், பகை. லோபம், பிறருக்குத் தீங்கு எண்ணும் நினைவு முதலிய பல விலங்குகள் திரிகின்றன. அறியாமையென்ற இருள் மண்டிக் கிடக்கிறது. ஆங்காரம் என்னும் மத யானேயின் அட்டகாசம் சொல்லி முடியாது. வேடர்கள் வன விலங்குகளைப் பிடிக்கவேண்டுமானல் கையில் தீப்பந்தங்களேக் கொண்டு செல்வார்கள். வெளிச் சத்தைக் கண்டால் அவை அஞ்சும். ஒளிக்கும் வன விலங்குகளுக்கும் பகை இருளுக்கும் காட்டு விலங்கு களுக்கும் நட்பு, இருள் கிரிம்பிய காட்டு ராஜ்யத்தில் ஒளி பரவினுல் விலங்குகளின் ஆரவாரம் அழியும். காடு சோலேயாகிவிடும். அதற்கு வழி உண்டா? 女 - - - கரிய உடம்பு படைத்த ம்த யானே காரிருள் செறிந்த காட்டிலே பிளிறுகிறது. மத யானேகள் பல வளரும் காடாகிய மனம் இருள் செறிந்திருக்கிறது. இது காடாக இருப்பது கண்டு மக்கள் அஞ்சுவார்கள் ஆல்ை யானே அஞ்சுமா? ஒரு களிறு இந்தக் காட்டுக்குள்ளே புகுந்தது. முன்பே பல களிறுகள் வாழும் காட்டில் பின்னும் ஒன்று. புகுந்தால் அந்தக் காட்டின் கடுமை மிகுமே ஒழியக் குற்ை யாது என்று தோன்றுகிறது அல்லவா? இந்தக் களிறு அத்தகையது அன்று. தன் காற்பட்டதையும் கைப்பட்ட தையும்கசுக்கித் துன்புறுத்தி அழிப்பது காட்டு யானே. இந்த யானையோ தன் காற்பட்டதைக் கையால் எடுத்துத் துன்பம் போக்கி இன்பம் தருவது. இந்தக் களிற்றின் திருக்கோலமே அழகியது. காட்டுக் களிற்றுக்குத்தும்பிக்கை என்ற ஓர் உறுப்பு இருக்கிறது. அதைக் கை என்று சொல்கிருேம். கை