பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஆலேக் கரும்பு பெரிய காடென்றே சொல்லவேண்டும். ஆனல் இந்தக் காட்டில் வேறு விலங்குகள் இல்லையே! பசிய இலையும், நறுமணம் வீசும் மலர்களும், இனிய கனிகளும் எங்கு நோக்கினும் கண்களுக்குத் தென்படுகின்றன. இங்கேதான் இப்போது இருளே இல்லையே! இருள் செறிந்த காடா இது? ஒளிவளர் காடாகிவிட்டது. அதனல் மரமும் இலையும் மலரும் கனியும் தெளிவாகத் தெரிகின்றன. இந்த நெஞ்சம், முன்பும் காடாகவே இருந்தது. ஒரு கையை மாத்திரம் உடைய யானைகள் வளரும் காடாக, இருள் வளரும் காடாக இருந்தது. இப்போதோ தன் தோள் கான்கோடு ஒரு கையையும் கூடப்பெற்ற கணபதிக் களிறு வளர்கிற காடு; ஒளிவளர் பெருங் காடு. எத்தகைய மாற்றம் ! - தன்தோள் நான்கின் ஒன்று கைம் மிகூஉம் களிறுவளர் பெருங்காடு ஆயினும் ஒளிபெரிது சிறந்தன்று அளியளன் நெஞ்சே! - (தன்னுடைய கிருத்தோள்கள் நான்கிைேடு ஒரு கையை மிகுதி யாகப் பெற்ற களிறு வளர்கின்ற பெரிய காடானுலும், ஒளி மிகுதியாகச் சிறந்து விளங்குவது, இாங்குதற்குரிய என் கெஞ்சு, இதற்கு முன் இர்ங்கும் கிலேயில் இருந்ததை கினேங்து, அளிய என் நெஞ்சு என்ருர்; அளிய-இரங்கத்தக்க.) - k தமிழ் நூல்களில் பழமையாகக் காணப்படும் துதி களுள் விநாயகரைப் பற்றிய செய்யுட்கள் மிகவும் குறைவு. ஆலுைம் கபிலதேவ நாயனர், பரண தேவ நாயனர், நம்பியாண்டார் நம்பி முதலிய புலவர்கள் பாடிய சில பிரபந்தங்கள் பதினேராங் திருமுறையில் உள்ளன. சில பாடல்கள் கர்ண பரம்பரையாக வருகின்றன. அவற்றின் நடையைப் பார்த்தாலே அவை பழைய பாடல்கள் என்று தெரியவரும். பழங்காலக்தொட்டு வழங்கி வரும் பாடல்களில் இதுவும் ஒன்று. இதனே இயற்றிய புலவர் இன்னரென்று தெரியவில்லை. - - -