12 ஆலேக் கரும்பு பெருமைக்கும் தம்முடைய பதவிக்கும் ஏற்றபடி அந்தப் .பூசை மிக மிகச் சிறப்பாக அமையவேண்டுமென்று எண்ணினன். உடனே தேவர்களே யெல்லாம் அழைத்துத் தன் கருத்தை வெளியிட்டான். அம்பிகைக்கு அபிடேகஞ் செய்யவேண்டிய திரவியங்களும் அர்ச்சனைக்கு வேண்டிய மலர்களும் நிவேதனத்துக்கு வேண்டிய உணவு வகைகளும் மிக விரிந்த வகையில் ஏற்பாடு செய்யவேண்டும் என்று சொன்னன். "இதுகாறும் யாரும் செய்தறியாத மகா பூசையாக அது இருக்கவேண்டும். தேவமன்னன் செய்த பூசையைப் போல நம்மால் செய்ய முடியுமா என்று பூலோகவாசிகளும், காட்டுவாசிகளாகிய முனிவர்களும் எண்ணி ஏங்கவேண்டும். என்ன? வருணு, சொல்வது தெரிகிறதா?" என்று கர்ஜனையோடு கேட்டான் இந்திரன், 'மகாராஜா கினேத்தால் ஆகாத காரியம் என்ன இருக் கிறது? அபிடேகத்துக்கு வேண்டிய தீர்த்தங்களைக் கொண்டுவரும் பொறுப்பை அடியேன் ஏற்றுக்கொள் கிறேன். ஏழு கடல்களையும் வேண்டுமானல் கொண்டு வந்து விடுகிறேன். சர்வலோகங்களிலும் உள்ள நதிகளையும் அழைத்து வருகிறேன். எம்பிராட்டியின் திருமேனி குளிரத் திருமஞ்சனம் செய்வோம்' என்று வருணன் கூறினன். - 'உன்னுடைய செய்தி என்ன?" என்று வாயுவை நோக்கிக் கேட்டான் இந்திரன். . - 'மணமுள்ள மலர்களேயும் தூபத்துக்கு வேண்டிய பொருள்களையும் நான் கொண்டுவந்துவிடுகிறேன். ஒரு மலரை விட்டு வைக்காமல் எல்லாவற்றையும் பறித்து வந்து விடுகிறேன்" என்ருன் வாயுதேவன். . பல்வகை நிவேதனங்களைச் சித்தம் செய்து சமர்ப் பிக்கிறேன்" என்ருன் அக்கினிதேவன். .
பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/18
Appearance