பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் திருமஞ்சனம் 13. 'வேண்டிய ஆடையாபரணங்களேத் தருகிறேன்" என்றது கற்பகம். . - 'அபிடேகத்துக்கு வேண்டிய பாலேத் தருகிறேன்" என்றது காமதேனு. - - - இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளைத் தொகுத்துத் தருவதாக வாக்களித்தார்கள். அம்பிகையின் பூசை உலகங் கண்டறியாத பெருவிழாவாக இருக்கப் போகிறது என்ற கினேவினல் பூரித்தான் ஆயிரங் கண்ணன். இந்தப் பூசையைக் கண்டு அம்பிகையே பிரமிப்பை அடைந்து தன்னைப் பாராட்டுவாள் என்றுகூட எண்ணித் தனக்குள்ளே கிளுகிளுத்தான். 女 இந்திரன் அம்பிகையின் திருச்சங்கிதானத்தை அடைக் தான். 'தாயே, எங்களுடைய வாழ்வையெல்லாம் கிலே நிறுத்திப் பாதுகாக்கும் உன்னேப் பூசித்து வழிபடும் ஆசை எனக்கு உண்டாகியிருக்கிறது. பூவுலகத்திற்குச் சென்று அங்குள்ள ஆலயங்களில் உன்னே நான் வழிபட்டிருக் கிறேன். அதனல் எனக்குத் திருப்தி உண்டாகவில்லை. உன்னுடைய சொந்த இடத்திலே எங்கள் பெருமைக்கு ஏற்ற வகையிலே மிக மிகப் பெரிய பூசையாக நடத்த வேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கிறேன். திருவுள்ளச் சம்மதம் அருளவேண்டும்" என்ருன். அம்மை சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு புன்முறுவல் பூத்தாள். 'என்னே அபிடேக ஆராதனைகள் செய்து வழிபடும் முறை மண்ணுலகத்துக்கு ஏற்றது. என்னுடைய விக்கிரகம் முதலியவற்றை அப்படிப் பக்தர்கள் பூசிக் கிரு.ர்கள். சாட்சாத் என்னேயே பூசிக்கவேண்டுமானுல் அது உங்களால் முடிகிற காரியமா?” என்று கேட்டாள் தாய.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/19&oldid=744381" இலிருந்து மீள்விக்கப்பட்டது