உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஆலேக் கரும்பு "என்ன அப்படிச் சொல்லுகிருய், தாயே? மனிதர்கள் சக்தி எங்கே, எங்களுடைய பேராற்றல் எங்கே? வருணன் வழங்கும் புனலில் மிகச் சிறிய அளவினால் அவர்கள் திரு மஞ்சனம் ஆட்டுகிருர்கள். உலகத்தில் உள்ள மக்கள் அனேவரும் சேர்ந்து பூசை செய்தாலும் அது மிகவும் அற்ப அளவிலேதான் இருக்க முடியும். எங்கள் பூசை அப்படியா இருக்கும்? அதையும் அருள்கொண்டு பார்த்துவிட வேண்டும், தாயே!” என்ருன். அன்னே சிரித்தாள். அப்படியா! சரி, உன் இஷ்டப் படியே ஆகட்டும்” என்று தன் உடம்பாட்டைத் தெரிவித்துக்கொண்டாள். - - -ā அன்று அமர லோகமே அல்லோல கல்லோலப் பட்டது. அசுரர்களிடமிருந்து விடுதலே பெற்று மீண்ட காலத்திலே கூட அத்தனை ஆரவாரம் இல்லை. தேவியின் மகா பூசைக்காகத்தான் அவ்வளவு முழக்கம், பரபரப்பு, வேகம், ஆட்டம், ஒட்டம் எல்லாம். இந்திரனுக்குத் தலைகால் புரியவில்லை. வாயுவுக்கோ கால் நிலை கொள்ளவில்லை. வருணன் எழும்பியும் குதித்தும் ஒடியும் துள்ளியும் தன் ஊக்கத்தை வெளிப்படுத்துகிருன், அக்கினி வேகத்தோடு சீறுகிருன். - அம்பிகையின் பூசைக்குரிய திரவியங்கள் குவிந்தன, அதைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப்போனன் இந்திரன். எல்லாம் அம்பிகையின் திருச் சந்நிதானத்தை அடைந்தன. பூசை ஆரம்பித்தது. வேதங்கள் கோஷித்தன. ஆக, மங்கள் முழங்கின. கின்னரர் கீதம் பாடினர். வித்தியா தரர் வீணை வாசித்தனர். முனியுங்கவர்கள் மந்திரங்களை உச்சரித்தனர். இந்திரனே தன் கையால் பூசை புரிந்தான். 'இதோ இது ஆகாச கங்கை. இதோ இது பூலோக கங்கை. இதோ பாதாள கங்கை இதோ பாற் கடல்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/20&oldid=744382" இலிருந்து மீள்விக்கப்பட்டது