16 ஆலேக் கரும்பு அம்பிகை உடனே பேசவில்லை. பெருமூச்சுவிட்டாள். "என்ன சொன்னுய்? பூசை என்ரு சொன்னுய்? அமர்க்கள மாக அல்லவோ இருந்தது ? இங்கே பார்' என்ருள். துர்வாச முனிவர் பார்த்தார். அம்பிகையின் திரு மேனி கொப்புளம் கொப்புளமாக இருந்தது. "இது என்ன?" என்று பதறித் துடிதுடித்துப் போளுர் முனிவர். 'இதுதான் அவர்கள் செய்த பூசையின் பயன்' என்ருள் அம்பிகை. - 'சப்த சாகரங்களும் திதிர்த்தங்களும் கொண்டு அபிஷேகம் செய்தார்களே!' - ஆம்! உண்மை ஆல்ை அவற்றைத் தம்முடைய அகங்காரத்திலே கொதிக்க வைத்து அபிஷேகம் செய் தார்கள். இது என்னுல் சகிக்க முடியவில்லை. அக்கினியின் மத்தியிலே ஆனந்தக் கூத்தாடும் எனக்கு, அகங்காரத்தி னுர்டே ஒரு கணமும் இருக்க ஒண்னது. இந்திரன் செய்த அபிடேகத்தில் அவன் அகங்கார வெம்மைதான் இருந்தது. அதனுல் என் தேகம் கன்றியது. அவன் வீசிய மலர்களில் அவனுடைய ஆணவத்தின் காற்றம் அடித்தது. அவன் அணிவித்த ஆடையாபுரணங்களில் அவனுடைய அகம் பாவம் இருந்து உறுத்தியது. ஐயோ! அவன் செய்த நிவே தனங்கள் அத்தனையும் ஒரே கசப்பு: அகங்தைச் சுவையில் ஊறிப்போன கசப்பு: - . . . . - . ... துர்வாசர் கலங்கினர் ஒன்றும் சொல்வத் தோன்ருது பிர்ம்ை பிடித்து கின்ருர், அம்பிகையின் திருமேனியிலே கொப்புளங்களைக் கண்ட கண்களைக் குத்திக்கொள்ள வேண்டாமோ என்று விம்மினர். 'அம்பிகே, இந்தக் கொப்புளங்கள் ஆற வழியில்லையா?" என்று அந்த விம்ம லுக்கிடையே கே ட்டார்.
பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/22
Appearance