பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிதையின் திருமஞ்சனம் IT 'உண்டு, அது எனக்குக் கிடைக்கும். பொறு' என்ருள் மகாம்ாதா. o - k . - மாலையில் மீண்டும் அம்பிகையைத் தரிசிக்க வந்தார் துர்வாசர். உள்ளே புகுந்தார். அம்பிகை ஆனந்தமாக "ஹா ஹா"காரம் செய்தபடியே அசைந்து அசைந்து இன்பத்திலே மூழ்கியிருந்தாள். அவள் திருமேனி சுடர் விட்டு விளங்கியது. கொப்புளங்களைக் காணவில்லை. அந்த மேனியில் அங்கங்கே சிறு சிறு நீர்த்துளிகள். துர் வாசர் மெல்ல, 'தாயே!” என்ருர் - - மருந்து கிடைத்துவிட்டது. ஒடு, உடனே பூலோகத் துக்கு ஒடு. அங்கே ஒரு சிறிய கோயிலில் என் சந்நிதிக்கு முன் ஒருவன் எனக்கு அபிடேகஞ் செய்கிருன் கையால் அல்ல; கண்ணுல் செய்கிருன் போய்ப் பார். அதைப் பார்க்கும் பாக்கியம் வேறு யாருக்கும் இல்லை. உடனே போ' என்று கட்டளே பிறந்தது. , - . துர்வாசர் ஓடினர். சின்னஞ் சிறு கோயிலுக்குள்ளே சென்ருர், அம்பிகையின் திருமுன்னர் யாரோ ஒரு பக்தன் கண்ணே மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவன் கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்தது. தாயே, கருணக் கடலே, எங்கும் நிறைந்தவளே!" என்று அவன் சொல்கிருன் வார்த்தைகள் தழுதழுக்கின்றன. ஞானக் கண்ணக் கொண்டு துர்வாச முனிவர் ஊடுருவிப்பார்த் தார். எலும்பும் தோலும்: கங்தையாடையுமாக இருந்த அந்தப் பக்தனுடைய உள்ளத்தில் அம்பிகை ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தாள். அவன் கண்ணிலிருந்து நீர் ஊற்றெடுத்து மார்பிலே வழிந்தது. அதன் தண்மை உள்ளே பாய, அம்பிகை குதித்துக் கூத்தாடினள். துர்வாசருக்கும் கண்ணில் நீர் வந்துவிட்டது. அன் பில்ை உருகும் அந்தக் கங்தைத் திருக்கோலப் பெரியானத்