பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 ஆலேக் கரும்பு தம்மை அறியாமலே வணங்கினர். மீண்டும் திருக்கைலாசம் சென்று அம்பிகையை அணுகினர். அவரால் ஒன்றும் பேசவே முடியவில்லை. ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தார். "பார்த்தாயா?" என்ற கேள்வி அன்னேயின் திருவாக் கிலிருந்து எழுந்தது. துர்வாசர் பேச முயன்ருர், சிரமப் பட்டுத்தான் பேசினர். "மகா ஆச்சரியம்! அற்புதம்! ஆனந்தம்! உலக மெல்லாம் பரவிய பெரிய நதிகள் இருக்கின்றன. சப்த சாகரங்கள் இருக்கின்றன. அவற்ருல் உன் உலகங் கடந்த திருமேனியைத் திருமஞ்சனமாட்டினர்கள், இந்தி ராதி தேவர்கள். அதனல் உனக்கு எள்ளளவும் உகப் பில்ல; உன் திருமேனி வெதும்பியது. ஆனல்-என்ன ஆச்சரியம் ஏழைத் தொழும்பர்கள் அன்பில்ை உருகி விழிநீர் பெருக்கினல் அந்தக் கண்ணருவியிலே ஆனந்தமாக ஆடுகிருய். உன்னுடைய கருணேத் திறத்தை என்ன வென்று சொல்வேன்! அந்த அன்பர்களின் பெருமையை யாரால் அளவிட முடியும் ' என்று அதிசயப் பெருக்கி ஞலே அவர் பேசிக்கொண்டே போனர். „ “ ★ இந்தக் காட்சியை அப்படியே காணுவிட்டாலும், இக் காட்சிக்கு மூலமான கருத்தை ஒரு புலவர் அழகிய சிறு பாட்டொன்றில் வெளியிட்டிருக்கிரு.ர். பாசவதைப் பரணி என்ற நூலில் வருகிறது. அது. - - என்! பாவும் ஆறுகடல் ஏழிருந்தும் என்அம்ம்ை அன்பாளர் கண் அருவி ஆடுவது திருவுள்ளம்! என்ன ஆச்சரியம் எங்கும் பரவிய ஆறுகளும் சப்தசாகரன் களும் தனக்குத் திருமஞ்சனத்துக்குரியனவாக இருந்துங்கட்ட, ஏன் அன்னேயாகிய பராசக்திக்கு பக்தர்கள் அன்பில்ை கசிந்து பெருக்கும் கண்ணிர் அருவியாலே கிருமஞ்சனமாடுவதுதான். திருவுள்ளத்துக்கு உவப்பானது - - - . . . . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/24&oldid=744386" இலிருந்து மீள்விக்கப்பட்டது