பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியேன் விண்ணப்பம் 23 'வழக்கமாக அந்த மனிதனுக்கு ஏதாவது மரண அறிகுறியை உண்டாக்கியிருக்கிறீர்களா?" என்று யமன் விசாரித்தான். - . 'அறிகுறி ஒன்றும் இல்லை. போகும்போது வழியில் இடறிவிட்டு உயிரைக் கொண்டுவர வேண்டியதுதான்' என்று குறிப்பிட்ட தூதுவன் பணிவோடு விடை யளித்தான். . 'அவன் வெளியே எப்போது புறப்படவேண்டும்?” . "இதோ இன்னும் சில கணங்களில் புறப்பட வேண்டும்." . - "அப்படியா? அவன் எந்த ஊரில் இருக்கிருன்?" 'மதுரை மாநகரில்” என்ருன் துாதுவன். யமதர்மனுக்கு மதுரை என்ற சொல்லேக் கேட்ட வுடனே மனம் குழம்பியது. 'மதுரையை விட்டு வெளியூருக்குப் போகட் போகி முன?' என்று அவசரமாகக் கேட்டான் வைவஸ்வதன். 'இல்லை, வீட்டை விட்டு வெளியே வருவான். அப்போது......" என்று சித்திரகுப்தன் இப்போது பதில் கூறினன். நேரமாய் விட்டபடியால் காலதாதன் அந்த மனிதன் உயிரைப் பிடிக்கப் போய்விட்டான். - - யமதர்ம ராஜனுக்கு என்ன காரணத்தாலோ பயம் தோன்றியது. தன் ஞானப் பார்வையை மதுரையின்மீது திருப்பினன். அந்த மனிதன் வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டான். காலதுரதன் அவனைத் தொடர்ந்து செல்கிருன். உயிர் விடப்போகும் மனிதன் இப்போது கோயிலுக்குள் புகுந்தான். காலது தன் வெளி வாசலிலே நின்று விட்டான். உள்ளே புகுவதற்கு அவனுக்கு அநுமதி யில்லை. கோயிலுக்குள்ளே புகுந்த மனிதன் திரும்பி