பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஆலேக் கரும்பு டையும் உடைய வாயை உடையவளே, தென்கூடலாகிய மதுரையில் எழுங்தருளிய மீளுட்சியம்மையாகிய சிறிய பெண்பிள்ளையை, யான் திருக்கோயிலுக்குள் சென் தெண்டனிட்ட அந்தப் பொழுதிலே யமன், 'தேவரீருக்கு அடியேன் தெண்டனிட்ட விண்ணப்பம்" என்று எனக்குப் பணிவாக ஒலே எழுதுவான்.) மீளுட்சியை வணங்கினவர்களுக்கு யமபயம் இல்லே என்பது கருத்து. அந்தக் கருத்தை மிகவும் அற்புதமாக ஒரு நாடகக் காட்சியே நம் உள்ளத்தில் உருவாகும்படி, யாகப் பாடி அளித்த புலவர் பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்.